முரண்பாட்டின் விதை Phoenix, Arizona, USA 65-0118 1இன்றிரவு ஒரு சிறு பொருளாக, அல்லது ஒரு சிறு வேத வாசிப்புக்கென்று, கர்த்தருக்குச் சித்தமானால் அவர் நமக்கு இந்த பொருளைத் தந்தருள, பரி. மத்தேயு 13:24 முதல் 30 வசனங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். மேலும் 36 முதல் 40 வசனங்களையும் படிக்க விரும்புகிறேன். இப்பொழுது பரி. மத்தேயு 13ம் அதிகாரம், 24ம் வசனம் முதல். தேவனுடைய வார்த்தையைப் படிக்கும் போது கூர்ந்து கவனியுங்கள். என் வார்த்தைகள் தவறலாம். ஆனால் அவருடைய வார்த்தைகளோ ஒரு போதும் தவறாது. வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. மனுஷர் நித்திரை பண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து கோதுமைக்குள் களைகளை விதைத்து விட்டுப் போனான். பயிரானது வளர்ந்து கதிர் விட்ட போது, களைகளும் காணப்பட்டது. வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி களைகள் உண்டானது என்றார்கள். அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப் போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள். அற்தகு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும் போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காத படிக்கு. இரண்டையும் அறுப்பு மட்டும் வளரவிடுங்கள். அளப்ப காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குச் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார். மத்.13:24-30. 2கவனித்தீர்களா? ''முதலாவது, களைகளைப் பிடுங்கி அவைகளைக் கட்டுகளாகக் கட்டுங்கள்.'' அன்றொரு இரவு கட்டலினா மலைகளின் உச்சியில் நான் அமர்ந்து, ஜெபத்தில் தரித்திருந்து இதை படித்த போது, விசித்திரமான ஏதோ ஒன்று எனக்கு நேர்ந்தது. அப்பொழுது நான், ''இன்றிரவு இதைக் குறித்து பேசுவதற்கென உபயோகிக்க பொருத்தமான வார்த்தையை எங்கு கண்டு பிடிக்க முடியும்?'' என்று வியந்தேன். எனவே, நான் சென்று ''முரண்பாடு'' (Discrepancy) என்னும் வார்த்தையைக் கண்டு பிடித்தேன். அதன் அர்த்தம் என்னவென்று நான் வெப்ஸ்டர் அகராதியில் நோக்கின போது. அது, ''வேற்றுமையை விதைத்தல்'' அல்லது ''முரண்பாடாக இருத்தல்'', ''ஏற்கனவே இருந்த ஒன்றுக்கு முரண்பாடாக இருத்தல்'' என்று அதில் இருந்தது. எனவே இன்றிரவிற்கான பொருளை, ''முரண்பாட்டின் விதை'' என்று தலைப்பிட முடிவு செய்தேன். அவருடைய வார்த்தையை நாம் அணுகும் போது, கர்த்தர் தாமே அதை ஆசிர்வதித்துத் தருவாரென நம்புகிறேன். 3மேலும் 36 முதல் 43 வசனங்களில் இந்த உலமையின் அர்த்தத்தை அவரே விளக்கியுள்ளார் என்று நாமறிவோம் எவ்வாறு அந்த விதை முதிர்ந்தது என்று அதை நாம் இப்பொழுது சிந்திக்கும் நேரத்தில், 36 முதல் 43 வசனங்களையும் நாம் வாசிப்போம், அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பி விட்டு வீட்டுக்கும் போனார்: அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப் பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று கேட்டார்கள். அவர் பிரதியுத்தரமாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்; நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்; அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவ தூதார்கள். ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறது போல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும். மனுஷ குமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும். அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப் போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். மத்.13:36-43. 4இயேசுவே அந்த உவமைக்கு விளக்கம் அளித்தார். எனவே, அதன் அர்த்தம் என்னவென்று நாமறிவோம். விதை விதைத்தல், அறுப்பு இவைகளை நாம் அணுகும் போது அவரே அதன் அர்த்தத்தை விளக்கியுள்ளார். இயேசு இந்த உவமையை தமது காவத்தில் கூறின போதிலும், அது உலகத்தின் முடிவில், இந்த நாளாகிய காலத்தின் முடிவில் நிறைவேற வேண்டிய ஒன்று என்று அவர் அர்த்தப்படுத்தினார் என்று நான் நம்புகிறேன். இன்றிரவிற்கான பொருள் நாம் வாழும் இந்நேரத்திற்கு மிகப் பொருத்தமானது என்று நம்புகிறேன். ஏனெனில் இயேசுவே, ''சேர்த்தல் உலகத்தின் முடிவில் நடக்கும்'' என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அப்படித்தான் முடிவில் உண்டாகும். அப்பொழுது, கோதுமை சேர்க்கப்பட்டு ராஜ்யத்திற்கு கொண்டு செல்லப்படும். களைகளும் சேர்க்கப்பட்டு சுட்டெரிக்கப்படும். அது அவ்வாறே நடக்கும் என்று நான் நம்புகிறேன். மற்றொரு வேதவாக்கியமும் என்னை அவ்வாறு நம்பத்தூண்டுகிறது. அதை நான் இங்கு குறித்து வைத்துள்ளேன். அது மத்தேயு;24:24 முரண்பாட்டின் விதையைக் குறித்து இயேசு பேசும் போது. இவை பிரண்டும் ஒன்றுக்கொன்று மிக அருகாமையில் இருந்து. கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் என்று கூறினார். இரண்டும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக காணப்படும். 5வேதத்தில் வேறொரு இடத்தில், மழை நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் பெய்கின்றது என்று எழுதப்பட்டுள்ளது. (மத்;5:45). பெந்தெகொஸ்தே ஜனங்களிடையே எனக்கு ஏற்பட்ட முதல் அனுபவத்தை நான் நினைவு கூருகிறேன். நான் இந்தியானாவிலுள்ள மிஷாவாகர் என்னுமிடத்திற்கு சென்றிருந்தேன். அங்கு நடந்த ஒரு பெரிய கன்வென்ஷனில் நான் பங்கு கொண்டேன். இதைப் போன்ற ஒரு பெரிய கூட்டம் அங்கிருந்தது. அங்கு வடக்கத்தியரும் ஒன்று கூடியிருந்தனர். அது கறுப்பு நிறத்தவர் ஒதுக்கப்பட்ட (Segregation) நாட்களாக இருந்ததால், அவர்கள் அங்கே கூட வேண்டியதாயிற்று, பெந்தெகொஸ்தேயினரில் இரு பெரிய சாரார் இருந்தனர் அவர்கள் பேசுவதை நான் அதுவரை கேட்டதில்லை. அதற்கு முன்பு அவர்களை நான் சந்தித்ததும் கிடையாது. அவர்கள் அந்நிய பாஷையில் பேசுவதை நான் கேட்பது அதுவே முதல் தடவையாகும். கன்வென்ஷனில் கடைசி வரிசையில், நான் அவர்கள் அங்கத்தினனாக இராதபடியால் - நான் அப்பொழுது ஒரு இளைய பாப்டிஸ்டு போதகராக இருந்தேன்- நான் பின் வரிசையில் அமர்ந்து கொண்டேன். நான் முதன் முறையாக ஒருவர் அந்நிய பாஷை பேசுவதைக் கேட்ட போது, அது என்னவென்றே அறியாமலிருந்தேன். அங்கு இருவர் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர். ஒருவர் அந்நிய பாஷை பேசினார், மற்றவர் அதற்கு அர்த்தம் உரைத்தார். நான் மிகவும் ஊக்கமாக வேதத்தைப் படிக்கத் தொடங்கி, அது வேதபூர்வமானது என்று கண்டு கொண்டேன். பரிசுத்த ஆவி என்ன செய்வாரென்று வேதம் கூறியுள்ளதோ, அவ்வாறே அது அமைந்திருந்தது. 6அதற்கு ஒரு நாள் கழித்து, அன்றிரவு என் இருதயம் மிகவும் தூண்டப்பட்டது. நான் சாளக் கொல்லையில் உறங்கினேன். ஒரு படுக்கையைப் பெற்றுக்கொள்ள என்னிடம் போதிய பணம் இல்லை. நான் திரும்பிச் செல்வதற்கு வேண்டிய பணம் மாத்திரமே என்னிடமிருந்தது. எனவே, எனது காளை உண்விற்காக, இரண்டு நாள் பழைய தாய் போன ரோல்களை (Rolls) வாங்கி சாப்பிட்டேன். அவர்களுடன் உண்ண நான் வரவேற்கப்பட்டேன். ஆனால் அதற்கான கட்டணத்தை செலுத்த என்னிடம் பணமில்லை. அது பணமதிப்பு குறைவின் (Depression) காலமாயிருந்தது - 1933ம் ஆண்டு. எனவே, அது எனக்கு மிகவும் பணக்குறைவுள்ள காலமாக இருந்தது. ''அவர்களுடன் நான் உண்ண விரும்பவில்லை ஆனால், அவர்களிடம் என்ன உள்ளது என்று அறிய விரும்புகிறேன். என்னிடம் இல்லாத ஏதோ ஒன்று அவர்களிடம் உள்ளது'' என்று எண்ணினேன். அன்று காலை அவர்கள், ''போதகர் அனைவரும் மேடைக்கு வந்து, உங்களை அறிமுகம் செய்து, நீங்கள் யாரென்றும் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்னும் தெரியப்படுத்துங்கள்'' என்று அறிவித்தனர். நான், ''வில்லியம் பிரான்ஹாம், சுவிசேஷகன் ஜெபர்ஸன்வில்லிலிருந்து வருகிறேன்'' என்று கூறிவிட்டு அமர்ந்து கொண்டேன். அன்று மேடையிலிருந்த போதகர் அனைவரிலும் நான் இளையவன். அடுத்த நாள் என்னைப் பேசும் படி மேடைக்கு அழைத்தனர். நான் பேசி முடித்த பின்பு, எங்களுக்கு மகத்தான தருணம் உண்டாயிருந்தது. அதன் பிறகு நான் அநேகரை சந்திக்க நேர்ந்தது. அவர்கள் என்னை - அவர்கள் சபைகளுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். 7அதன் பின்பு நான், ''அந்த இருவர் அந்நிய பாஷை பேசி அர்த்தம் உரைத்தனரே, அதை நான் பெற்றுக் கொள்ள முடியுமானால்!'' என்று எண்ணினேன். அது என் இருதயத்தில் எரிந்து கொண்டிருந்தது. அதை நான் எப்படியாகிலும் பெற வேண்டுமென்று நினைத்தேன் நான் உங்களுக்கு தொடக்கத்தில் கூறினவிதமாக, அந்த சிறு வரத்தை நாம் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகின்றோம். ஆனால் வரங்களும், தேவன் அழைத்த அழைப்புகளும் மனந்திரும்புதல் இல்லாமலே அளிக்கப்படுகின்றன என்று உங்களுக்குத் தெரியும். (ரோமர்;11:29ல், [“Forthe gifts and calling of God are without repentance”] என்று ஆங்கில வேதாகமத்தில் உள்ளது, “தேவனுடைய இருபை வரங்களும் அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே'' என்று தமிழ் வேதாகமத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்.) அவைகளை நீங்கள் வாழ்நாள் முழுவதும் பெற்றிருக்கின்றீர்கள் நீங்கள் அவைகளுடன் பிறக்கிறீர்கள், என் சிறுவயது முதல் என்னை அறிந்தவர்களுக்கு அது உண்மையென்று தெரியும் நான் நினைத்தேன்... அது என்னவென்று அப்பொழுது எனக்குத் தெரியவில்லை. நீங்கள் வேண்டுமானால் அதை 'தரிசனம்' என்றழைக்கலாம். அவர்களுடன் நான் பேசக் கூடுமானால் என்று எண்ணினேன். அந்த கட்டிடத்திலிருந்த ஆவி உண்மையாகவே தேவனுடைய ஆவி போல் காணப்பட்டது. நான் அவர்களில் ஒருவருடன் உரையாடினேன். அவரை சில கேள்விகள் கேட்டேன். அவர் உண்மையான கிறிஸ்தவர். அதைக் குறித்து எவ்வித ஐயப்பாடும் இல்லை. அந்த மனிதன் உண்மையான விசுவாசி. ஆனால் மற்றவருடன் தான் உரையாடின போது தான், எப்பொழுதாகிலும் ஒரு மாய்மாலக்காரனை சந்தித்திருந்தால், அது அவரே, உண்மையாக அந்த மனிதன்... அவருடைய மனைவியின் தலைமயிர் பழுப்பு நிறம் கொண்டது. ஆனால், அவருக்கோ கறுப்பு நிறத் தலைமயிர் கொண்ட ஒருத்தியின் மூலம் குழந்தைகள் இருந்தன, (சகோ. பிரன்ஹாம் இதை தரிசனத்தில் கண்டார் - தமிழாக்கியோன்.) ''நான், இது என்ன? எனக்கு ஒரே குழப்பமாயுள்ளதே! நான் அடிப்படை கொள்கைக்காரன் (fundamentalist). அது தேவனுடைய வார்த்தையாக இருக்க வேண்டும், இல்லை அது தவறாக இருக்க வேண்டும். இதோ தேவனுடைய ஆவி இங்குள்ளது. எனக்குத் தெரிந்தவரை ஒருவர் உத்தமர், மற்றவர் மோசமானவர். ஆனால், ஆவி இருவர் மேலும் விழுந்ததே! அது எப்படியாகும்?'' என்று நினைத்து குழப்பமுற்றேன். 8இரு ஆண்டுகள் கழித்து, ஜெபம் செய்வதற்கென நாள் வழக்கமாகச் செல்லும் குகைக்குச் சென்று ஜெயம் செய்து கொண்டிருந்தேன். குகையில் தூசி அதிகமாகப் படிந்திருந்தது. எனவே பகல் வேளையில் நான் குகைக்கு வெளியே வந்து, என் வேதாகமத்தை அங்கிருந்த ஒரு மரக்கட்டையின் மேல் வைத்தேன். அப்பொழுது காற்று அடித்து வேதாகமத்தை எபிரேயர் 6ம் அதிகாரத்துக்குத் திறந்தது. எப்படி கடைசி நாட்களில் நாம் சத்தியத்திலிருந்து விழுந்து போனால் மனந்திரும்புவதற் கேதுவாய் நம்மை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம் என்றும், இனி பாவத்திற்கு வேறு பலியே இல்லையென்றும், தகாத தாயும் சுட்டெரிக்கப்படும், முடிவாயுமுள்ள முள் செடிகளும், முள் பூண்டுகளும் எப்படி தங்கள் மேல் பெய்யும் மழையைக் குடிக்கின்றன் என்றும், அவை புறக்கணிக்கப்பட்டு, கோதுமை மணி களஞ்சியத்தில் சேர்க்கப்படுமென்றும், அந்த அதிகாரம் கூறுகின்றது. நான், ''காற்று எதேச்சையாக வேதாகமத்தை அந்த அதிகாரத்திற்கு திருப்பியிருக்கலாம்'' என்று எண்ணினேன். நான் வேதாகமத்தை மூடிவிட்டு திரும்பவும் அதை கீழே வைத்தேன். ஆனால் மறுபடியும் காற்று அடித்து அதே அதிகாரத்திற்கு வேதாகமத்தை திருப்பினது. இவ்வாறு மூன்று முறை நிகழ்ந்தது. ''இது என்ன வினோதமாயுள்ளதே!'' என்று நினைத்தேன். நான் எழுந்து நின்று, ''ஆண்டவரே, வேதாகமத்தை நீர் ஏன் அதே அதிகாரத்திற்குத் திருப்ப வேண்டும்? நான் படிக்க வேண்டும் என்பதற்காகவா?'' என்று சொல்லி, அதை படிக்க ஆரம்பித்த போது, தகாத தாயும் சபிக்கப்படுகிறதற் கேற்றதாயுமிருக்கிற முள் செடிகளையும், முன் பூண்டுகளையும் சுட்டெரிப்பதே அதன் முடிவு என்று எழுதப்பட்டிருந்தது. 9உண்மையான தரிசனங்கள் நமது முயற்சி எதுவுமின்றி கிடைக்கின்றன. அது தேவனால் உண்டாகின்றது. பாருங்கள்? தரிசனத்தில், என் முன்னால் ஒரு பெரிய பூமி காணப்பட்டது. அது முழுவதும் உழப்பட்டிருந்தது. அங்கு வெள்ளை உடை தரித்த ஒருவர் கோதுமையை விதைத்துக் கொண்டே சென்றார். அவர் பூமி பூராவும் இவ்வாறு விதை விதைத்துக் சென்ற பிறகு, பயங்கர உருவம் கொண்ட ஒருவன் கறுப்பு உடையணிந்து, களை விதைகளை எல்லாவிடங்களிலும் விதைத்தான். இவையிரண்டும் ஒன்றாக வளர்ந்தன. இரண்டிற்கும் தாகம் உண்டானது. அவைகளுக்கு மழை அவசியமாயிருந்தது. இரண்டும் தலை வணங்கி, “ஆண்டவரே, மழை அனுப்பும், மழை அனுப்பும்” என்று ஜெபிப்பது போல் காணப்பட்டது. அப்பொழுது மேகங்கள் தோன்றி, மழை இவ்விரண்டின் மேலும் பெய்தது. அப்பொழுது சிறு கோதுமை தளிர் குதித்து, ''கர்த்தருக்கு ஸ்தோத்திரம்? கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!'' என்று ஆர்ப்பரித்தது: அவ்வாறே சிறு களை செடியும் குதித்து, ''கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!'' என்று சொல்லி மகிழ்ந்தது. அதன் பின்பு தரிசனம் மறைந்தது. மழை நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் பெய்கின்றது. ஒரே ஆவி கூட்டத்தில் விழுந்து, மாய்மாலக்காரரும், உண்மையான கிறிஸ்தவர்களும் மற்றெல்லாரும் அதில் களிகூர முடியும். அது முற்றிலும் உண்மை. ஆனால் அது என்ன? அவர்களுடைய கனிகளினால் அவர்கள் அறியப்படுகின்றனர். பாருங்கள்? அந்த ஒரே வழியில் தான் அவர்கள் யாரென்பதை கண்டுகொள்ள முடியும். சில சமயங்களில் காட்டு கோதுமை மணி, சமையலுக்குரிய உண்மையான கோதுமை மணி போலவே பாவனை செய்து, அதை போன்றே தோற்றமளிப்பதால், அது கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் என்று நாம் காண்கிறோம். அந்த காரியங்களைக் குறித்து போதிக்க வேண்டிய அல்லது பேச வேண்டிய ஏற்ற நேரத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்று நான் கருதுகிறேன். 1041ம் வசனத்தைக் கவனியுங்கள். கடைசி நாட்களில் இவ்விரண்டும் மிக அருகாமையில் இருக்கின்றன. அவர் அவைகளை ஒன்றும் செய்யாமல், கடைசி காலம் வரை விட்டுவிட்டார். அவைகளைப் பிரித்தெடுக்க அவர் மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பெந்தெகொஸ்தேயினர் போன்றவர்களை சார்ந்திருக்க முடியவில்லை. அவைகளைப் பிரித்தெடுக்க தமது தூதர்களை அவர் அனுப்புவதாகக் கூறுகின்றார். சரியானதையும், தவமுனதையும் பிரித்தெடுக்க ஒரு தூதன் வருகின்றான் கர்த்தரால் அனுப்பப்பட்ட தூதனேயன்றி வேறு யாரும் அதை பிரித்தெடுக்க முடியாது, அவன் தான் எது சரியென்றும் எது தவறென்றும் எடுத்துரைப்பான். கடை காலங்களில் தமது தூதர்களை அனுப்புவதாக தேவன் கூறினார். மற்ற காலங்களில் அல்ல, கடைசி காலங்களில் தூதர்களை அனுப்பி, அவர்கள் - ஒன்று சேர்ப்பார்கள். அது வரப்போகிற அறுப்பின் காலம் என்று நாமறிவோம். தூதன் என்பது, ''தூதைக் கொண்டு வருபவன், செய்தியாளன்'' (messenger) என்று பொருள் படும். ஏழு சபையின் காலங்களுக்கு, ஏழு தூதர்கள் இருந்ததாக நாம் காண்கிறோம். விதைத்தவர்கள் யார் என்று அவர் கூறினதைக் கவனியுங்கள். ஒருவர் தேவனுடைய குமாரன். அவர் நல்ல விதையை விதைத்துச் சென்றார். அவருக்குப் பிறகு சந்துரு - அதாவது பிசாசு - வந்து, முரண்பாட்டின் விதையை விதைத்தான். நண்பர்களே, உலகம் உண்டான முதற்கு ஒவ்வொரு காலத்திலும், அது அவ்வாறே நிகழ்ந்து வந்துள்ளது. நிச்சயமாக. ஆதி காலத்திலிருந்து இக்காலம் வரைக்கும், அதுவே நிகழ்ந்து வருகின்றது. ஆதி காலத்தில் தான் இது தொடங்கினது. 11அவர், ''தேவனுடைய விதை, தேவனுடைய வார்த்தை'' என்று கூறினார், ஓரிடத்தில் இயேசு, ''தேவனுடைய வார்த்தையே விதை'' என்று கூறியுள்ளார். ஒவ்வொரு விதையும் அதனதன் ஜாதியை முளைப்பிக்கும். கிருஸ்தவர்கள் - அதாவது, தேவனுடைய புத்திரர்; ராஜ்யத்தின் புத்திரர் - தேவனுடைய விதையாக இருப்பார்களானால், அவர்கள் தேவனுடைய வார்த்தையாக இருக்க வேண்டும். அதாவது, அவர்கள் வாழும் காலத்தில், அவர்கள் அந்த காலத்துக்குரிய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வித்தாக, வெளிப்பட்ட தேவனுடைய வார்த்தையாக இருக்க வேண்டும். ஆதியில் தேவன் தமது வார்த்தையைக் கொடுத்தார். ஒவ்வொரு காலத்திற்கும், அக்காலத்துக்குரிய வித்தும், நேரமும், வாக்குத்தத்தங்களும் அளிக்கப்பட்டுள்ளன. நோவா காட்சியில் வந்த போது, அந்த காலத்திற்கு அவன் தேவனுடைய வித்தாக, தேவனுடைய வார்த்தையாகத் திகழ்ந்தார். மோசே தோன்றின போது, அவன் நோவாவின் செய்தியுடன் வர முடியவில்லை. அது கிரியை செய்யாது. ஏனெனில் அவனுடைய காலத்திற்கு அவன் தேவனுடைய வித்தாகத் திகழ்ந்தான். கிறிஸ்து தோன்றின போது, அவர் நோவா அல்லது மோசேயின் செய்தியுடன் வர முடியவில்லை. அது அவருடைய காலம். அது ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி, ஒரு குமாரனை பெற்று, அவர் மேசியாவாக இருக்க வேண்டிய காலம். 12நாம் லூத்தரின் காலத்தைக் கடந்து வந்து, வெஸ்லியின் காலத்தை (மெதோடிஸ்டு காலத்தை) கடந்து வந்து. பெந்தெகொஸ்தேயினரின் காலத்தையும் அடைந்தோம். ஒவ்வொரு காலத்திற்கும் அக்காலத்துக்குரிய தேவனுடைய வார்த்தையின் வாக்குத்தத்தம் அளிக்கப்பட்டது. அந்தந்த காலத்திற்கென வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையை வெளிப்படுத்தின ஜனங்கள், அந்தத்த காலத்தின் வித்தாகத் திகழ்த்தனர். இயேசு இங்கு கூறின விதமாக, அவர்கள் ராஜ்யத்தின் புத்திரர். அது உண்மை. பரிசுத்த ஆவி அந்தந்த காலத்தில் அவருடைய பிள்ளைகளின் மூலம் கிரியை செய்து, தம்மை வெளிப்படுத்துகின்றார். அந்த பிள்ளைகள் அந்தந்த காலத்தில் ராஜ்யத்தின் விதையாக உள்ளனர். கவனியுங்கள், சாத்தான் தான் களையை - முரண்பாட்டின் அல்லது வேற்றுமையின் விதையை - விதைத்தவன். அவனே அந்த பயங்கரமான செயலைப் புரிந்த குற்றவாளி. தேவன் ஆதியில் தமது முதல் அறுவடையாகிய மானிடரை பூமியில் வைத்த போது - அது ஆதாம், ஏவாள். என்று உங்களுக்குத் தெரியும் - சாத்தான் அப்பொழுதே அவனுடைய விதையை விதைத்தான். நன்மை தீமை என்னவென்னும் அறிவை ஆதாம் அப்பொழுது பெற்றிருக்கவில்லை. அதற்கு அவன் அப்பொழுது வரவேயில்லை. 13தேவன் தமது பிள்ளைகளுக்கு தமது வார்த்தையை பாதுகாப்பிற்கென (defence) அருளினார். நமக்கு தேவனுடைய வார்த்தையைத் தவிர பாதுகாப்பு வேறெதுமில்லை. அதுவே நமது பாதுகாப்பு. எந்த குண்டுகளும், எந்த பாதுகாவலான இடங்களும் - அது அரிசோனாவிலோ அல்லது கலிபோர்னியாவிலோ இருந்தாலும் சரி - நமக்குப் பாதுகாப்பாக இருக்க முடியாது. நமக்கு ஒரே ஒரு பாதுகாப்பு மாத்திரமேயுள்ளது. அதுதான் வார்த்தை. வார்த்தை மாமிசமாகி கிறிஸ்து இயேசுவாக நம்மிடையே வாசம் பண்ணினார். அவரே நமது ஒரே பாதுகாப்பு. அவருக்குள் நாம் இருப்போமானால், நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். உங்களுக்குத் தெரியுமா? உண்மையான விசுவாசிக்கு பாவம் கூட கணக்கில் எடுக்கப்படுவதில்லை. ''தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யான்'' (1.யோவான்;3:9) அவன் பாவம் செய்ய முடியாது. பாருங்கள்? அது அவன் மேல் சுமத்தப்படுவதில்லை. தாவீது, “எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்” என்றான் (சங்;32:2). நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கும் போது, பாவம் செய்ய வேண்டுமெனும் விருப்பம் உங்களுக்கு இருப்பதில்லை. ''ஆராதனை செய்கிறவர்கள் ஒரு தரம் சுத்தமாக்கப்பட்ட பின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லை.'' (எபி;10:2), நீங்கள் பாவம் செய்ய விரும்புவதில்லை. உலகத்தின் கண்களில் நீங்கள் பாவிகளாயிருக்கலாம், ஆனால் தேவனுடைய பார்வயிைல் நீங்கள் அப்படியில்லை. ஏனெனில், நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கின்றீர்கள். நீங்கள் பாலமில்லாத ஒருவருக்குள் இருக்கும் போது, எப்படி பாவியாக இருக்க முடியும்? ஏனெனில், நீங்கள் யாருக்குள் இருக்கின்றீர்களோ, அவரைத்தானே தேவன் காண்கிறார்! 14இந்த அறுப்பின் நேரம். ஆதியில் தேவன் தமது விதையை பூமியில் விதைத்து, அதை தமது பிள்ளைகளின் தமது குடும்பத்தினரின் - இருதயங்களுக்குள் வைத்து, அந்த வார்த்தையின்படி நடக்க வேண்டுமென்று கூறின போது வார்த்தையைப் பின்பற்றுவதே அவர்களுடைய ஒரே பாதுகாப்பாக இருந்தது. ஆனால் சத்துரு அங்கு வந்து, தேவனுடைய வார்த்தைக்கு முரணாயுள்ள முரண்பாட்டின் விதையை விதைத்து, பாதுகாப்பாயிருந்த அந்த தடையை (barrier) முறித்துப் போட்டான். ஆதியில் அது முரண்பாடாக இருந்திருக்குமானால், இப்பொழுதும் அது முரண்பாடாகவே இருந்து வருகிறது. தேவனுடைய வார்த்தையுடன் கூட்டப்படும் எதுவும் முரண்பாடான விதையாகவே உள்ளது. அது எங்கிருந்து வந்திருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அது ஸ்தாபனத்திலிருந்து வந்தாலும், இரானுவத்திலிருந்து வந்தாலும் அல்லது அரசியல் ஆதிக்கத்திலிருந்து வந்தாலும் எனக்குக் கவலையில்லை. தேவனுடைய வார்த்தைக்கு முரணான எதுவும், முரண்பாட்டின் விதையாகவே உள்ளது. ஒரு மனிதன் தன்னை சுவிசேஷப் பிரசங்கியென அழைத்துக் கொண்டு, ''அற்புதங்களின் காலம் முடிவடைந்து விட்டது'' எனக் கூறுவானானால், அது முரண்பாட்டின் விதை. ஒரு மனிதன் தன்னை ஒரு சபையின் போதகர், ஊழியக்காரர் என்று கூறிக் கொண்டு, இயேசு கிறிஸ்து எல்லாவிதத்திலும் (சரீரத்தில் தவிர) மாறாதவர் என்றும், அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்றும். விசுவாசிக்கா விட்டால், அதுவே முரண்பாட்டின் விதை. அவன், ''அற்புதங்களும், அப்போஸ்தல காலமும் முடிவுபெற்று விட்டது'' என்று கூறுவானானால், அதுவே முரண்பாட்டின் விதை. அவர்கள் தெய்வீக சுகமளித்தல் என்பது கிடையது என்பார்களானால், அதுவே முரண்பாட்டின் விதை. உலகம், இப்படிப்பட்டவர்களால் நிறைந்துள்ளது. அது நெருக்கமாக வளர்ந்து, கோதுமையை நெருக்கிப் போடுகின்றது. 15முரண்பாட்டின் விதையை முதலாக விதைத்தவன் பிசாசு என்று அழைக்கப்படுகின்றான் என்று நாம் காண்கிறோம். அது, ஆதியாகமம் 1ல் என்று நமக்குத் தெரியும். மத்தேயு 13ம் அதிகாரத்தில், தமது வார்த்தைக்கு முரணாயுள்ள எதையும் இயேசு, 'பிசாசு' என்று அழைப்பதாக நாம் காண்கிறோம். இந்த 1956ம் ஆண்டிலும், எழுதப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தைக்கு முரணாக விதைக்கப்படும் எந்த முரண்பாடும், அல்லது தனிப்பட்ட விதத்தில் அதற்கு வியாக்கியானம் அளிக்கும் எதுவும் முரண்பாட்டின் விதையாகும். தேவன் அதை, கௌரவிக்க மாட்டார். அவரால் அதை கௌரவிக்க முடியாது. அது கலக்காது. அது நிச்சயமாக கலக்க முடியாது. அது கடுகு விதையைப் போன்றது. அது எதனுடனும் கலவாது. அதை நீங்கள் கலப்புள்ளதாய் செய்ய முடியாது. அது சுத்தமாக அப்படியே இருக்கும். 16தேவன் தமது விதையை ஏதேன் தோட்டத்தில் விதைத்த போது, அது ஆபேலைப் பிறப்பித்தது என்று காண்கிறோம். ஆனால், சாத்தான் தனது முரண்பாட்டின் விதையை அங்கு விதைத்த போது, அது காயீனைப் பிறப்பித்தது. ஒன்று நீதியுள்ளவனைப் பிறப்பித்தது, மற்றொன்று அநீதியுள்ளவனைப் பிறப்பித்தது. ஏவாள் தேவனுடைய வார்த்தைக்கு முரணாயுள்ள முரண்பாடான வார்த்தைக்குச் செவி கொடுத்ததனால் பாவம் என்னும் பந்து அங்கு உருளத் தொடங்கி, அன்று மூதல் உருண்டு கொண்டேயுள்ளது. தூதர்கள் வந்து அதை பிரித்து, தேவன் தமது பிள்ளைகளை ராஜ்யத்திற்கு கொண்டு சென்று, களைகள் சுட்டெரிக்கப்படும் வரைக்கும், அதை நாம் அகற்றவே முடியாது. இந்த இரு திராட்சை செடிகளையும் கவனியுங்கள். இதன் முக்கியமான அம்சங்களை வலியுறுத்த சிறிது நேரம் கிடைத்தால், அதை முடித்துக் கொண்டு இன்னும் சில நிமிடங்களில் வியாதியஸ்தருக்கு நாம் ஜெபிக்க தொடங்கி விடலாம். 17இன்றிரவு நாம் தெரிந்து கொண்ட பொருளில், மத்தேயு 13ம் அதிகாரத்தில் - ''இரண்டையும் வளரவிடுங்கள்'' என்று தேவன் கூறின விதமாகவே, இவ்விரு விதைகளும் ஒன்றாகவே வளர்ந்து வந்தன. காயீன் நோத் என்னும் தேசத்திற்கு சென்று, தனக்கு ஒரு மனைவியைத் தெரிந்து கொண்டு, அவளை விவாகம் செய்தான். ஆபேல் கொலை செய்யப்பட்டான். ஆனால் அவனுடைய ஸ்தானத்தில் தேவன் சேத்தை எழும்பப் பண்ணினார். நன்மை, தீமையான இவ்விரு சந்ததிகளும் வளர்ந்து கொண்டே வந்தன. காலம் செல்லச் செல்ல, சந்ததியும் பெருகினது. முடிவில் அது மிகவும் துன்மார்க்கமாய் ஆன காரணத்தால் தேவன் அதை அழிக்க வேண்டியதாயிற்று. ஆனால், இவ்விரு விதைகளும் - தேவனுடைய விதையும், முரண்பாட்டின் விதையும் - வளர்ந்து, அது யூதாஸ் காரியோத்திலும், இயேசுவிலும் முடிவடைந்தது. இயேசு தேவனுடைய வித்தாக இருந்தார். அவர் தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியானவர் (வெளி;3:14). அவர் தேவனேயன்றி வேறுயாருமல்ல. யூதாஸ்காரியோத்து கேட்டின் மகனாகப் பிறந்தான் (யோவான்;17:12). அவன் பாதாளத்திலிருந்து புறப்பட்டு வந்து பாதாளத்துக்குத் திரும்பிச் சென்றான். இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன். அவர் வெளிப்பட்ட தேவனுடைய வார்த்தை. யூதாஸ்காரியோத்து, அவனுடைய முரண்பாட்டில், பிசாசின் வித்தாக இருந்தான். அவன் ஆதியில் தன் தகப்பன் காயீன் இருந்தது போலவே இருந்தான். 18யூதாஸ் சபையில் இருந்தது போல் நடித்தான். உண்மையில் அவன் உத்தம்மாய் இருக்கவில்லை. அவனுக்கு உண்மையில் விசுவாசம் இல்லை. (அப்படியிருந்திருந்தால் அவன் இயேசுவை மறுதலித்திருக்க மாட்டான்.) ஆனால், அவன் முரண்பாட்டின் விதையை விதைத்தான். அவன் உலகத்தோடு - உலகப் பொருளோடு - நட்பு கொண்டு, அதே சமயத்தில் இயேசுவுடனும் நட்புகொள்ளலாம் என்று கருதினான். ஆனால், அவ்வாறு செய்ய முடியாதபடிக்கு. அவனுக்கு கால தாமதமாகிவிட்டது. அந்த பயங்கரமான நேரம் வந்தபோது - அவன் இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் அந்த பொல்லாத செயலைப் புரிந்தபோது - அவன் முன்னேற்றத்திற்கும், பின் வாங்குதலுக்கு மிடையேயிருந்த கோட்டைத் தாண்டினான். அவன் வஞ்சகனாக, தான் செல்ல வேண்டிய வழியில் செல்ல வேண்டியதாயிற்று. அவன் முரண்பாட்டின் விதையை விதைத்து, அக்காலத்து ஸ்தாபனங்கள்லிருந்த பரிசேயர், சதுசேயர் இவர்களின் தயவைப் பெற முயன்றான். அவன் பணம் சம்பாதித்து, ஜனங்களின் மத்தியில் பிரபலம் வாய்ந்தவனாக இருக்கலாமென்று எண்ணினான், மனிதர்களுடைய தயவை நாட முயல்வதால், அநேகர் அந்த முரண்பாட்டிற்குள் சென்று விடுகின்றனர். நாம் மனிதருடைய தயவையல்ல, தேவனுடைய தயவை நாடுவோம்! ஆனால் யூதாஸோ, அந்த முரண்பாடு அவனுக்குள் இருந்ததனால் மனிதருடைய தயவை நாடினான். 19இயேசு வார்த்தை என்று நமக்குத் தெரியும். ''ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது, அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்'' என்று யோவான் 1 உரைக்கிறது. (யோவான்;1:1,14.) வார்த்தையே விதை. அந்த விதை மாமிசமாகி நம்மிடையே வாசம் பண்ணினார். யூதரஸ் சத்துருவின் விதையாக, முரண்பாட்டின் விதையாக இருந்து, அவனும் மாமிசமாகி, யூதாஸ்காரியோத்து என்னும் மனிதனாக நம்மிடையே வாசம் பண்ணினான். அவனுக்கு உண்மையான விசுவாசம் இருக்கவில்லை. விசுவாசம் என்னும் ஒன்று அவனுக்கிருப்பதாக அவன் பாவனை செய்தான். உண்மையான விசுவாசம் என்பது ஒன்று, பாவனை விசுவாசம் என்பது வேறொன்று. தேவனுடைய உண்மையான விசுவாசம் தேவனை விசுவாசிக்கக் செய்யும். தேவன் வார்த்தை என்று அது விசுவாசித்து, அதனுடன் எதையும் கூட்டாது. நாம் அதனுடன் ஒரு வார்த்தையை கூட்டினால், அல்லது ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டால், நம்முடைய பங்கு ஜீவ புஸ்தகத்திலிருந்து. எடுத்துப் போடப்படும் என்று வேதாகமத்தின் கடைசி அத்தியாயம், வெளி;22:18 உரைக்கிறது. 20ஆதியில், வேதாகமத்தின் முதலாம் புத்தகத்தில் கர்த்தர் ஆதாம் ஏவானிடம், அவர்கள் எல்லா வார்த்தையையும் கைக்கொள்ள வேண்டுமென்றும், ஒரு வார்த்தையையும் மீறக் கூடாதென்றும், அவர்கள் வார்த்தையின்படி வாழ வேண்டுமென்றும் கட்டளையிட்டார். வேதாகமத்தின் நடுவில் இயேசு, தமது காலத்தில் வாழ்ந்தவர்களிடம், ''மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்'' என்றார் (மத்;4:4). வேதாகமத்தின் முடிவில் வெளிப்படுத்தின விசேஷத்தில் - இப்புத்தகத்திலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டால், அல்லது ஒரு வார்த்தையை கூட்டினால், ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய பங்கை தேவன் எடுத்துப் போடுவார்'' என்று முன்னெச்சரிக்கையாக கூறப்பட்டுள்ளது. எனவே போலியான எதுவும் இருக்க முடியாது உண்மையான, கலப்படமற்ற தேவனுடைய வார்த்தையே இருக்க முடியும். அதுதான் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளும். அவர்கள் மனித சித்தத்தின்படியோ, அல்லது கை குலுக்குதலினாலோ, அல்லது ஒருவகையான ஞானஸ்நானத்தின் மூலமாகவோ, பிறவாமல், தேவனுடைய ஆவியினால் - பரிசுத்த ஆவியினால் - பிறந்து, அவர்கள் மூலமாய் தேவனுடைய வார்த்தை தன்னை வெளிப்படுத்துகின்றது. அதுவே, உண்மையான தேவனுடைய வித்து! 21சத்துரு சபையைச் சேர்ந்து கொண்டு, ஒரு ஸ்தாபனப்பிரமாணம் அல்லது ஏதாவதொன்றில் மிகவும் வைதீகமாக இருக்கிறான். ஆனால் அதுவல்ல - அது முரண்பாடு, உண்மையான, சத்தியமான தேவனுடைய வார்த்தையில் தலையிடும் எதுவும் முரண்பாடே. அதை நாம் எப்படி அறிந்து கொள்வது? ''இதை வியாக்கியானம் செய்ய எங்களுக்கு உரிமையுண்டு'' என்று அவர்கள் கூறுன்றனர். இல்லை, ஐயா! தேவனுடைய வார்த்தையை வியாக்கியானம் செய்ய எந்த பனிதனுக்கும் உரிமையில்லை. தேவனே தமது வார்த்தையின் வியாக்கியானி அவர் ஒன்றை வாக்குத்தத்தம் செய்கிறார். பிறகு அதை நிறைவேற்றுகிறார். அதுவே, அதன் வியாக்கியானம். அவர் ஒன்றை வாக்குத்தத்தம் செய்து விட்டால் அதை நிறைவேற்றுகிறார். அது தான் அதன் வியாக்கியானம். தேவனுடைய வார்த்தைக்கு முரணாயுள்ள எதுவுமே முரண்பாடாகும். முற்றிலுமாக! நான் கூறினது போன்று, யூதாஸுக்கு உண்மையான விசுவாசம் இல்லை. அவன் பாவனை விசுவாசத்தைக் கொண்டிருந்தான். அவர் தேவனுடைய குமாரன் என்னும் விசுவாசத்தைப் பெற்றிருந்ததாக அவன் எண்ணியிருந்தான். ஆனால், உண்மையில் அவர் தேவனுடைய குமாரன் என்று அவன் அறியாமருலிந்தான். அப்படியிருந்தால், அவன் அந்த செயலைப் புரிந்திருக்கவே மாட்டான், தேவனுடைய வார்த்தை சத்தியம் என்பதை விட்டுக் கொடுக்கும் எந்த மனிதனும் பாவனை விசுவாசத்தையே பெற்றிருக்கிறான், உண்மையான தேவனுடைய தாசன் எவனும் அந்த தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருப்பான். 22சில நாட்களுக்கு முன்பு அரிசோனாவிலுள்ள ஒரு போதகர் - இந்த பட்டினத்திலுள்ள பிரபலமான ஒரு வேதாகமப் பள்ளியைச் சேர்ந்தவர் - என்னிடம் வந்து, உங்கள் தவறை சரிப்படுத்த விரும்புகிறேன் என்றார். நான், ''இதுவே நல்ல தருணம். வரட்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டேன்.'' அவர், ''திரு. பிரான்ஹாம் அவர்களே, நீங்கள் உத்தமமும், நேர்மையுமானவர் என்று எனக்குத் தெரியும்... ஆனால், நீங்கள் அப்போஸ்தல உபதேசத்தை உலகிற்கு. அறிமுகம் செய்ய விரும்புகின்றீர்களே! அப்போஸ்தலம் காலம் அப்போஸ்தலருடன் முடிவுற்றது'' என்றார். நான், ''சகோதரனே, முதலாவதாக உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். தேவனுடைய வார்த்தை ஒவ்வொன்றும் தேவ ஆவியால் அருளப்பட்டதென்றும் விசுவாசிக்கிறீர்களா?'' என்று கேட்டேன். அவர், ''ஆம், ஐயா! நிச்சயமாக விசுவாசிக்கிறேன்?'' என்றார். ''அப்படியானால், அப்போஸ்தல காலம் எப்பொழுது முடிவடைந்தது என்று வேதத்திலிருந்து உங்களால் காட்ட முடியுமா? நீங்கள் காண்பித்தால் நான் விசுவாசிக்கிறேன்'' என்றேன். நான் தொடர்ந்து, “ராஜ்யத்தின் திறவு கோல்களைப் பெற்றிருந்த அந்த பேதுரு. அப்போஸ்தல காலம் தொடங்கின அந்த பெந்தெகொஸ்தே நாளன்று, ஜனங்கள் சகோதரரே, இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்ட போது, பேதுரு, ''நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.'' வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய காத்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது, என்றான். அப்படியிருக்க, தேவனுடைய வார்த்தை எப்படி அதை முரண்படுத்தும்?'' என்று கேட்டேன். அவர், ''எனக்கு பயங்கர ஜலதோஷம் பிடித்திருக்கிறது'' என்று சமாளித்தார். நான், ''நானும் அப்படித்தான் நினைக்கிறேன்'' என்றேன். பாருங்கள்? நீங்கள் இப்பொழுது சொல்லுங்கள். தேவன் இன்னமும் அழைத்துக் கொண்டிருக்கிறாரா? அவர் அப்படி அழைத்துக் கொண்டிருந்தால், அப்போஸ்தல காலம் இப்பொழுதும் உள்ளது என்று அர்த்தமாகிறது. நிச்சயமாக! ''நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் யாவருக்கும்'' அவர் அழைக்கும் யாவருக்கும், அவர் இனிமேலும் அழைக்கப் போகிறவர்களுக்கு! அப்படியானால் அப்போஸ்தலகாலம் இப்பொழுதும் நீடித்து வருகிறது. ஏனெனில், இயேசு கிறிஸ்து நேற்று, இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். 23ஒவ்வொரு காலத்திலும் முரண்பாட்டின் விதை விதைக்கப்பட்டது என்று நாம் காண்கிறோம். இன்னும் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களில் இதை முடிச்க முடியுமானால் நலமாயிருக்கும். ஆனால் அது முடியாது. காலங்கள் தோறும் நாமெல்லாரும், ஏறக்குறைய எல்லோருமே வேதத்தைப் படிக்கின்றோம். இயேசு இவ்வுலகில் வந்த போது, அந்த முரண்பாட்டைக் கண்டார். அவரே வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை. அவரே வார்த்தைக்கு தேவன் அளித்த வியாக்கியானம். ஏனெனில் அவர், ''வேத வாக்கியங்களை ஆராயந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய நீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே. என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே'' என்றார் (யோவான்;3:39). பார்த்தீர்களா? அவரே வார்த்தையின் வியாக்கியானம். இக்காலத்திலுள்ள மறுபடியும் பிறந்த ஒவ்வொரு தேவனுடைய குமாரனும், குமாரத்தியும் வார்த்தையின் வியாக்கியானமாவார்கள். நீங்கள் சகல மனிதராலும் வாசிக்கப்பட்டும் இருக்கிற எழுதப்பட்ட நிரூபங்கள் (2.கொரி;3:2). ஆம். கவனியுங்கள், இயேசு, ''முரண்பாடுகளை உபதேசங்களாகப் போதித்து வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள். மனுஷருடைய கற்பனைகளை, கோட்பாடுகளை உபதேசங்களாக தேவனுடைய வார்த்தை என்று போதித்து வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள். அதற்கும் தேவனுடைய வார்த்தைக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதிருக்கும் போது, அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்'' என்றார். (மாற்;7:7) 24பாருங்கள், ஒவ்வொறு காலமும் அத்தகைய பயிரை முளைப்பிக்கிறது. ஒவ்வொரு காலமும் அவ்வாறு செய்துள்ளது. நமது காலமும் அதற்கு விலக்கு அல்ல. நாமும் அதைப் பெற்றிருக்கிறோம். மற்றெல்லா காலங்களையும் ஒருங்கே கணக்கிட்டால், அதை காட்டிலும் மகத்தான காலம். நமது காலம். ஏனெனில், உலக சரித்திரம் முடிவு பெற. வேண்டிய காலம் இது. மற்றெல்லா காலங்களையும் விட இக்காலத்தில் மிகப்பெரிய முரண்பாடு காணப்படுகின்றது மற்ற காலங்களில் காணப்பட்ட முரண்பாடு, அக்காலத்த வரை உண்மையான ஜீவனுள்ள தேவனிடமிருந்து விக்கிரகங்களுக்கு இழுத்துச் சென்றது. இன்று, இயேசு மத்;24:24ல் கூறினது போன்று, அது தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக மிக அருகாமையில் இருக்கும். முரண்பாட்டைக் குறித்து பேசுவோமானால், ஓ, அது மிகவும் தந்திரமுள்ளது. சாத்தான் ஜனங்களின் மத்தியில் இருக்கின்றான். ஒரு வேதபண்டிதன் - டாக்டர் பட்டம் பெற்ற ஒருவர் - வார்த்தையை ஏறக்குறைய பிழையின்றி பிரசங்கிப்பது போல் தோன்றலாம். ஆனால், அவரை கவனித்துப் பாருங்கள்! எங்காவது ஓரிடத்தில் அவர், ''அது இக்காலத்துக்குரியதல்ல'' என்பார். ஓ, அது இக்காலத்துக்கும் உரியது. ஏனெனில், தேவன் அவ்வாறு கூறியுள்ளார். 25முரண்பாடு என்ன செய்ததென்று கவனியுங்கள். அது, நோவாவின் காலத்தில் தேவனுடைய கோபாக்கினையைக் கொண்டு வந்தது. தேவன் தமது தீர்க்கதரிசியை அனுப்பி, அவனும் ஜுவாலித்து எரிகிற அக்கினியைப் போல் பிரசங்கித்து, ஜனங்கள் மனந்திரும்ப அவர்களை அழைத்தான். முரண்பாடு வெள்ளத்தில் மூழ்கினது. ஆனால் சாத்தான் என்ன செய்தான்? நோவாவின் மகனான காமுக்குள் அவன் திரும்ப வந்து, அதை மறுபடியும் விதைக்கத் தொடங்கினான். அது முற்றிலும் உண்மை. மோசே தோன்றினான். இஸ்ரவேல் ஜனங்களை வனாந்தரத்தின் வழியாக, வழி நடத்தின மகத்தான தீர்க்கதரிசி அவன். என்ன நேர்ந்தது? தேவனுடைய மகத்தான தீர்க்கதரிசியாகிய மோசே அவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட சத்தியத்தை - பரிபூரணமான சத்தியத்தை கொண்டு வாந்தான். அவன் தேவனை சந்தித்தான். அவன் தேவனை சந்தித்தான் என்று தேவன் நிரூபித்துக் காண்பித்தார். அங்கு ஆசாரியர்கள் தங்கள் மதங்களையும், சடங்காச்சாரங்களையும் கொண்டிருந்தனர். ஆனால், தேவனுடைய வார்த்தையின் வியாக்கியத்திற்கு நிருபரையாக மோசே திகழ்ந்தான். அதை மறந்து விட வேண்டாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தின் வியாக்கியானமாக் மோசே திகழ்ந்தான். அவர் அதை செய்வதாக வாக்களித்திருந்தார். அவன் தேவனுடைய வியாக்கியானம். 26என்ன நேர்ந்தது? சபையானது எகிப்தை விட்டுப் புறப்பட்டு பயணம் செய்யத் தொடங்கின சில நாட்களுக்குள் என்ன நேர்ந்தது? சாத்தான் பிலேயாம் என்னும் இரண்டாம் காயீனின் மூலம் தனது முரண்பாட்டுடன் வந்து, முரண்பாட்டை அவர்களிடையே விதைத்தான். அது உண்மையென்று நமக்குத் தெரியும். ''நாமெல்லாரும் ஒன்றே. அவர்கள் ஆராதிக்கிற அதே தேவனையே நாமும் ஆராதிக்கிறோம்'' என்பதே பிலேயாமின் போதகம். அடிப்படையில் அவன் சரியாகத்தான் இருந்தான். அவன் தேவனுக்கு பலி செலுத்தினான் - ஏழு ஆட்டுக் கடாக்கள், ஏழு காளைகள், ஏழு பலிபீடங்கள். மோசே வனாந்தரத்தில் செய்த விதமாகவே அவனும் பிழையின்றி செய்தான். ஆனால், அவர்களிருவரும் ஒன்றல்ல. என்ன நேரிடப் போகிறது என்பதற்கு அது நமக்கு நிழலாக அமைந்துள்ளது. காயீன் மறுபடியும் பிலேயாம் என்னும் மனிதனின் மூலம் வெளிப்பட்டான். ஆனால் மோசே என்னும் மனிதனின் மூலம் தேவன் வெளிப்பட்டு, ஒரு மனிதனின் மூலம் தமது வார்த்தைகளை வியாக்கியானப்படுத்தி, தம்மையும் தமது வாக்குத்தத்தத்தையும் ஒரு மனிதனின் மூலம் வெளிப்படுத்தினார். அச்சமயம் முரண்பாடும் தலை தூக்கினது. அதேபோன்று யூதாஸின் காலத்திலும் சாத்தான் தன் முரண்பாட்டுடன் தோன்றினான். 27''நாமெல்லாரும் ஒன்று, நாம் ஒரே தேவனை ஆராதிக்கிறோம், நாமெல்லாரும் ஒரே சபையை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். நாமெல்லாரும் ஒரே ஜனங்களாக இருக்க வேண்டும்'' என்னும் கருத்தை விசுவாசித்து அதன் விளைவாக இஸ்ரவேல் ஜனங்கள் செய்த பாவம் மன்னிக்கப்படவேயில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இயேசு தாமே, ''அவர்கள் எல்லோரும் மரித்தார்கள்'' என்று கூறினார் (யோவான்;6:49). அவர்களில் மூன்று பேரைத் தவிர மற்றெல்லாரும் அழிந்து போனார்கள். அவர்கள் தாம் அந்த வாக்குத்தத்தத்தைப் பிடித்துக் கொண்டு அதை விசுவாசித்தார்கள். பலவீனமானவர்கள், ''நம்மால் தேசத்தை கைப்பற்ற முடியாது, அது நம்மால் முடியாது'' என்று கூறின போது, காலேபும் யோசுவாவும் ஜனங்களை அமரிக்கையாயிருக்கச் செய்து, ''நாம் அதை எளிதில் கைப்பற்றி விடலாம். ஏனெனில், தேவன் அவ்வாறு நமக்கு வாக்களித்துள்ளார். எனவே, எதிர்ப்பு எவ்வளவு பலமாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை'' என்றனர். நாம் இன்னமும் தெய்வீக சுகமளித்தலைக் குறித்தும், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்தும் பிரசங்கிக்கலாம். நம்மை உலக காரியங்களின்று வேறு பிரிக்க தேவனுடைய வல்லமை இப்பொழுதும் உள்ளது. தேவன் அவ்வாறு கூறியுள்ளார்! அப்போஸ்தல காலம் முடிவு பெறவில்லை. அது முடிவு பெறாது, அது நீடித்து வருகிறது. நாம் அதே முரண்பாட்டை விதைத்தவனைக் காண்கிறோம். அந்த பாவம் இஸ்ரவேலுக்கு மன்னிக்கப்படவில்லை என்பதை நினைவு கூருங்கள். சகோதரனே, அது அன்று மன்னிக்கப்படாதிருந்தால், வெவ்வேறு காலங்களிலிருந்த வித்துக்கள் ஒன்று சேர்ந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் அது எப்படி மன்னிக்கப்படும்? 28பிலேயாம் செய்த இந்த பெரிய காரியத்தை கவனியுங்கள், அது தொடர்ந்து வந்து, முடிவில் யூதாஸ்காரியோத்து வருகையில் அது முடிவடைந்தது. அக்காலத்தில் இயேசுவும் தோன்றினார். அது என்ன? யூதாஸும், இயேசுவும், காயீன், ஆபேல் இவர்களின் உருவமாவர். யூதாஸ் பக்தியுள்ளவனாயிருந்தது போன்று, காயீனும் பக்தியுள்ளவனாயிருந்தான். காயீன் பலிபீடத்தைக் கட்டி பலியைப் படைத்தான். அவன் தேவனை வழிபட்டு, மற்றவனை (ஆபேலை) போல் உத்தமமாக இருந்தான். ஆனால் பாருங்கள், வார்த்தை என்னவெனும் வெளிபாட்டை அவன் பெற்றிருக்கவில்லை. ஆதாமும் - ஏவாளும் ஆப்பிள் பழத்தையோ அல்லது வேறெந்த பழத்தையோ புசித்ததாக அவன் எண்ணியிருந்தான். ஆனால், ஆபேலோ வெளிப்பாட்டின் மூலம் அது தவறென்று அறிந்திருந்தான். இரத்தத்தின் காரணமாக அவர்கள் வெளியே துரத்தப்பட்டனர் என்று அவன் அறிந்து, ஒரு ஆட்டுக்குட்டியை பலி செலுத்தினான். அவனுடைய காணிக்கை சதியென்று தேவன் சாட்சி பகர்ந்தார். அப்பொழுது காயின் பொறாமை கொண்டு அவனைக் கொன்றான். எந்த பலிபீடத்தின் மேல் அவனுடைய பலியாக - ஆட்டுக்குட்டி கொல்லப்பட்டதோ, அதே பலிபீடத்தின் மேல் அவன் தன் சகோதரனால் கொலையுண்டான். அது போன்று யூதாஸ் காரியோத்தும், இயேசு கிறிஸ்துவை மறுதலித்து. காயீன் ஆபேலைக் கொன்றவிதமாக, அவரை தேவனுடைய பலிபீடத்தின் மேல் கொன்று போட்டான். காயீன் முரண்பாடான விதையாக இருந்தான். கூலிக்கு வேலை செய்த பிலேயாமும் அவ்வாறே இருந்தான். அவனுக்கு அதைவிட நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். கர்த்தர் அவனை அற்புதங்கள், அடையாளங்கள் மூலம் எச்சரித்தார். கழுதையும் கூட அவனிடம் அந்நியபாஷை பேசினது. அப்படியிருந்தும் அவன் அதை தொடர்ந்து செய்தான். அவன் முரண்பாடான விதையை விதைப்பவனாகவே பிறந்திருந்தான். 29இந்த காலம் இதுவரை இல்லாத மிகப் பெரிய முரண்பாட்டில் முடிவடையும் என்று இயேசு முன்னறிவித்துள்ளார். லவோதிக்கேயா சபையின் காலம் வெது வெதுப்பாக இருந்து, அவரை சபைக்கு வெளியே தள்ளியிருக்கும் போது, அது முரண்பாடில்லாமல் வேறு எப்படி இருக்க முடியும்? நிச்சயமாக அது முரண்பாடே. அது இந்த காலத்தில் முடிவு பெறும். மறுபடியுமாக கல்வாரியில் காயீனும், ஆபேலும். கவனியுங்கள், இயேசு பரலோகத்துக்குச் சென்ற பிறகு பரிசுத்த ஆவி உலகிற்கு அனுப்பப்பட்டது, அது தான், நான் நேற்று இரவு கூறினது போன்று, வார்த்தையாகிய விதைக்கு ஜீவனை அளிப்பது. வார்த்தையை உயிர்ப்பிப்பது அதுவே. உயிர்ப்பிப்பது (quicken) என்றால், உயிரோடு காண்டு வருதல் என்று பொருள். உண்மையான பரிசுத்த ஆவி மாத்திரமே வார்த்தையை உயிரோடு கொண்டு வருகிறது. அது ஸ்தாபன பிரமாணங்களை உயிரோடு கொண்டு வராது, அதனால் முடியாது ஏனெனில் ஸ்தாபன பிரமாணங்களில் ஒன்றுமேயில்லை. தேவனுடைய வார்த்தை மாத்திரமே ஜீவனுள்ளது. ஏனெனில், அது தேவனாயுள்ளது. பாருங்கள். அது சரீரத்தை உயிர்ப்பிக்கிறது. 30கவனியுங்கள், யோவான் தன் பிள்ளைகளிடம் இவ்விதம் கூறினதாக வேதம் உரைக்கிறது. ''சிறு பிள்ளைகளே, அந்திக் கிறிஸ்துவினுடைய ஆவி இவ்வுலகில் வருமென்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. அது இப்பொழுது கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் கிரியை செய்கிறது.'' அது பரிசுத்த ஆவியின் வருகைக்குப் பிறகு ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் கழித்து. விதைக்கு உண்மையாக ஜீவனையளிக்கும் பரிசுத்த ஆவி வந்த போது, முரண்பாடும் அப்பொழுது வருவதை நாம் காண்கிறோம். அது தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. உண்மையான வார்த்தை உறுதிப்படுத்தப்பட்டது. முற்காலத்து தீர்க்கதரிசிகள் தேவனுடைய வார்த்தை சத்தியமென உறுதிப்படுத்தினர். நீங்கள், ''நிசாயா ஆலோசனை சங்கத்திற்கு முன்பிருந்த காலம்'' (Pre -Nicene Council) என்னும் புத்தகத்தை படித்திருப்பீர்களானால், ரோமர்கள் சபையை ஸ்தாபனமாக்க முயன்ற போது, பதினைந்து நாட்களாக இரத்தம் சிந்தப்பட்ட அரசியல் உண்டானது. அப்பொழுது ஆட்டுத் தோல் போர்த்தி, புற்பூண்டுகளைப் புசித்த தீர்க்கதரிசிகள் அங்கு வந்து தேவனுடைய வார்த்தைக்காக உறுதியாக நின்றனர். அது என்ன செய்தது? அது காயீனைப் போலவும், ஆபேலைப் போலவும் இருக்க வேண்டியதாயிருந்தது. ஒரு சாரார் மரிக்க வேண்டும். அது அப்படியே நிகழ்ந்து. வார்த்தையானது ஜனங்களிடையே அதற்கிருந்த செல்வாக்கை இழந்துவிட்டது. அவர்கள் ஓட்டு போட்டு ஆதி கத்தோலிக்க சபையிலிருந்த உண்மையான வார்த்தையை அகற்றிவிட்டு, முரண்பாடான ஸ்தாபனப் பிரமாணங்களை ஏற்றுக் கொண்டனர். அவர்கள் ஒரு போப் பாண்டவரை சேர்த்துக் கொண்டனர். ஒரு பேராயரை சேர்த்துக் கொண்டனர், அவர்கள் - இதை, அதை, மற்றதை சேர்த்துக் கொண்டனர். (பேதுரு , மரியாள், இன்னும் மற்றவர்களைக் குறித்த உண்மையான அர்த்தத்தை அவர்கள் கைவிட்டு, விக்கிரகங்களை உண்டாக்கி, அஞ்ஞான வழிபாட்டை நுழைத்து, அதை கிறிஸ்தவ மார்க்கம் என்றழைத்தனர். அது என்ன? முரண்பாடான விதை. முதன் முறையாக இவ்வுலகில் அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். அது என்ன? முரண்பாடான விதை விதைக்கப்பட்டு, சில கூட்டப்பட்டன, சில எடுக்கப்பட்டன. 31வெள்ளிக் கிழமை மாமிசம் புசிக்கக் கூடாது என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளதாக யாரகிலும் கேள்விப்பட்ட துண்டா? தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானத்திற்குப் பதிலாக தெளித்தல் முறையைக் கையாள வேதத்தில் எழுதப்பட்டுள்ளதாக யாராகிலும் கேள்விப்பட்டதுண்டா? 'மரியாளே, வாழ்க!' என்று திரும்பத் திரும்ப உச்சரிக்க வேண்டுமென்று வேதத்தில் எங்கு எழுதப்பட்டுள்ளது? அது போன்று பிராடெஸ்டெண்டுகளுடைய அழுகிப்போன காரியங்களும் வேதத்தில் எங்கு எழுதப்பட்டுள்ளது? பானை கொதிப் பாத்திரத்தை (kettle) நோக்கி, அது எண்ணெய் பசை கொண்டுள்ளது என்று கூற முடியாது. அது உண்மை. ஒருவன் ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான் (யாக்;2:10). தேவன் ஒரு ஸ்தாபனத்துடன் தொடர்பு கொண்டதாக யாராகிலும் கேட்டதுண்டா? ஏதாவதொன்று ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு, அதன் பின்பு எப்பொழுதும் உயிரோடிருந்ததை எனக்குக் காண்பியுங்கள். அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டவுடனே மரித்தனர். அதன் பின்பு அவை உயிரோடெழும்பவில்லை. ஏதாவதொன்று நிகழ இதுவே நேரம். தேவன் அசைவாட இதுவே நேரம் வார்த்தைக்கு ஜனங்களிடையேயிருந்த செல்வாக்கை, நீங்கள் கொன்று வருகிறீர்கள். இன்றைக்கும் அவ்வாறே செய்யப்பட்டு வருகின்றது. அவர்கள் செல்வாக்கைக் கொன்று, ''ஓ, அந்த உருளும் பரிசுத்தர்களின் கூட்டம், அவர்களிடம் ஒன்றுமேயில்லை'' என்கின்றனர். அது முரண்பாடு! வார்த்தையை முகமுசமாய் சந்தித்து அது என்னவென்று அறிந்து கொள்ளுங்கள்! தேவன் தமது சொந்த வார்த்தையை வியாக்கியானம் செய்கிறாரா என்று பாருங்கள். தேவன் இந்தக் கற்களினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார் (மத்;3:9). ஆமென். 32ஆதி கிறிஸ்தவர்களால் வார்த்தை முழுவதுமாக உறுதிபடுத்தப்பட்டது. தேவன் அவர்களை எல்லாவற்றினின்றும், வியாதியினின்றும், விடுவித்தார். அவர்களுக்கு தீர்க்கதரிசிகள் இருந்தனர். அவர்கள் அந்நிய பாஷை பேர் அதற்கு அர்த்தம் உரைத்து, செய்திகளை அளித்தனர். அது ஒவ்வொரு முறையும் உண்மையென நிருபிக்கப்பட்டது. ஆனால், உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தையிருந்த போதிலும், ஜனங்கள் ஓட்டு போட்டு அதை புறக்கணித்து, ஸ்தாபனத்திற்கு தங்கள் ஓட்டை அளித்தனர். அதுவே, (கத்தோலிக்க ஸ்தாபனமே - தமிழாக்கியோன்) எல்லா ஸ்தாபனங்களுக்கும், தாய். இவையிரண்டும் இப்பொழுது முதிர்ந்து விட்டன. அது மரித்தது, ஆனால் லூத்தரின் காலத்தில் அது முளைக்கத் தொடங்கினது. காலை உணவின் போது, இங்கு முன்பு அளிக்கப்பட்ட செய்தியின் மூலம், அதை நாம் அறிந்து கொண்டோம். லூத்தரின் காலத்தில் அது முளைக்கத் தொடங்கியது. ஆனால், அவர்கள் என்ன செய்தனர்? அந்த பெரிய மனிதன் மரித்த பின்பு அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். அது மறுபடியும் ஜான் வெஸ்லியின் காலத்தில் முளைக்கத் தொடங்கினது ஆங்கிலிகன்கள், நித்திய பாதுகாப்பு போன்றவைகளினால் அதை கட்டி, அதை பொதுவான ஒன்றாக (Universalism) - எல்லாருக்கும் தகுதியான ஒன்றாக கருதின போது என்ன நேர்ந்தது?தேவன், ஜான் வெஸ்லி என்பவரை எழுப்பி அவை எல்லாவற்றையும் கொன்று போட்டார். ஆனால் அவர் மரித்தவுடன் - ஆஸ்பரிபும், மற்றவர்களும் - என்ன நேர்ந்தது? அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர் இப்பொழுது எத்தனையோ விதமான மெதோடிஸ்டுகள் உள்ளனர். பின்பு ஒருவர் பின் ஒருவர் தோன்றினர்- அலெக்ஸாண்டர் காம்ப்பெல், ஜான் ஸ்மித் போன்றவர். 33முடிவில் அவையெல்லாவற்றினின்றும் பெந்தெகொஸ்தே தோன்றினது. அப்பொழுது என்ன நேர்ந்தது. அவர்கள் நன்றாக ஓடினார்கள், உங்களைத் தடை செய்தது யார்? நீங்கள் வெளிவந்த அதே சேற்றிற்கு திரும்பி விட்டீர்கள். அதே உளையான சேற்றிற்கு நீங்கள் மறுபடியும் சென்று, முரண்பாட்டிற்கு நீங்கள் மறுபடியும் சென்று, ஸ்தாபனங்கள் உண்டாக்கிக் கொண்டீர்கள். அதற்காக நீங்கள் வார்த்தைக்கு முரணானவைகளுடன் ஒப்புரவாக வேண்டியதாயிற்று. ஒவ்வொரு முறையும் தேவன் புதிதாக ஒன்றை அனுப்பும் போது, உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது உண்மை! மறுபடியும் முரண்பாடு! கவனியுங்கள், அன்றொரு நாள் நான் கூறினது போன்று, வேரிலிருந்து தோன்றும் உமி இலைகளின் வழியாக, மகரந்தப் பொடி பின் வழியாக, தண்டின் வழியாக வெளி வருகிறது. அந்த சிறு கோதுமை உமி காண்பதற்கு கோதுமை மணியைப் போல இருக்கும். நாமும் அவ்வாறுதான் எண்ணியிருந்தோம். அனால், அதை நீங்கள் திறந்து பார்த்தால் அங்கு கோதுமை மணியே இருக்காது. கோதுமை மணி உண்டாவதற்கு அது ஆதாரமாக அமைகின்றது. பின்பு அது செத்துவிடுகின்றது. அதிலுள்ள சத்து அதை விட்டு வெளியேறி, கோதுமை மணிக்குள் சென்றுவிடுகிறது. 34இன்று சபைகள் என்று அழைக்கப்படும் ஸ்தபானங்களுக்கு - பெந்தேகொஸ்தே சபைக்கும் கூட நாம் சென்றோம், ஆனால் நாம் திருப்தியடைய முடியவில்லை. எனவே, நாம் நமது சொந்த குழுக்களை உண்டாக்கிக் கொண்டோம். நமக்கு இது இருக்க வேண்டும், அது இருக்க வேண்டும் என்று சொல்லி, வெவ்வேறு குழுக்களை எழும்பியுள்ளன. ஒருவர் நின்று, ''அவர் வெள்ளை மேகத்தின் மேல் எழுந்து வருவார்'' என்கிறார். வேறொருவர், ''இல்லை, அவர் வெள்ளை, குதிரையின் மேல் வருவார்'' என்கிறார். ''அப்படியானால் நாம் இரண்டு குழுக்களை உண்டாக்கிக் கொள்வோம்'' என்று சொல்லி அவர்கள் பிரிந்து விடுகின்றனர். பாருங்கள். அது என்ன? முரண்பாட்டை விதைத்தல்! அவர் வரும் போது, என்னவானாலும், தமது சொந்த வார்த்தைக்கு. அவர் வியாக்கியானம் அளிப்பார். அதுவரை நாம் காத்திருப்போம்... அதைக் குறித்து பேசும் போது, இக்காலத்து செய்தியைக் கூட நீங்கள் கிரகித்துக் கொள்ளவில்லை. நீங்கள் எப்பொழுதும், தேவன் என்ன செய்யப் போகிறார் என்பதையும், கடந்த காலங்களில் அவர் என்ன செய்தார் என் பதையும் மாத்திரமே சுட்டிக் காட்டி, அவர் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அசட்டை செய்கிறீர்கள். அதன் காரணமாகத் தான் நாம் முரண்பாட்டைப் பெற்றுக் கொள்கிறோம். 35இன்று சபைகள் அனைத்துமே காற்றை விதைத்து, சுழல் காற்றை அறுவடை செய்து கொண்டிருக்கின்றன. நாம் இப்பொழுது ஜெபக்கூட்டங்கள் நடத்துவதில்லை, முன்லிருந்த ஆராதனைகள் இப்பொழுது நம்மிடையேயில்லை. அதன் காரணம் என்ன? நாம் அவை அனைத்தும் உள்ளே புகாதபடிக்கு கதவையடைத்து விட்டோம். பாருங்கள், பெந்தெகொஸ்தே சபைகளும் கூட கூந்தலைக் கத்தரித்துக் கொண்ட பெண்களால் நிறைந்துள்ளன. முன்பு அவர்கள் அதை அனுமதிப்பதில்லை. வர்ணம் தீட்டப்பட்ட முகங்கள், நகங்களுக்கு வர்ணம் தீட்டுதல். எல்லாவிதமான செயல்கள்! ஆண்கள் 'ரிக்கி'களைப் போல் இருக்கின்றனர். மூன்று நான்கு முறை விவாகமானவர்கள் 'டீக்கன்' (Deacon). பதவியை வகிக்கின்றனர். ஓ, என்னே முரண்பாடு! அது அசுத்தம்! அவர்கள் எவ்வாறு இப்படியெல்லாம் செய்கின்றனர்? தேவன் தமது சபையில் இவைகளை அனுமதிக்க மாட்டார். எனவே, இவைகளைச் செய்வதற்கு அவர்கள் ஒரு ஸ்தாபனத்தைச் சேர்ந்து கொள்ள வேண்டியதாயுள்ளது. இதை பகிரங்கமாக எடுத்துக் கூறினால், எங்கே ஸ்தாபனத்தை விட்டு அவர்கள் துரத்தப்படுவார்களோ என்று சில போதகர் பயப்படுகின்றனர். தேவனே! தேவனுடனும், அவருடைய வார்த்தையுடனும் மாத்திரமேயல்லாமல் வேறெதனுடனும் தொடர்பு கொள்ளாத மனிதரை எங்களுக்குத் தாரும்! அப்படிப்பட்டவர்கள் சத்தியத்தை மாத்திரமே எடுத்துரைப்பார்கள். அது தான் நமக்குத் தேவை. ஆனால், நாம் என்ன செய்தோம்? முரண்பாட்டை விதைத்தோம். நாம் காற்றை விதைத்து, இப்பொழுது சுழல் காற்றை அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். 36சுட்டெரிக்கட்படுவதற்காக அவர்கள் இப்பொழுது, ஒன்று சேருகின்றனர் என்பதை கவனிக்கவும். ''முதலாவது களைகளைப் பிடுங்கி, கட்டுகளாக்க கட்டுங்கள். அவைகளை குவியலாக குவியுங்கள். நான் அவைகளைச் சுட்டெரிப்பேன்'' என்று இயேசு கூறினார் என்பதை கவனித்தீர்களா? மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், லூத்தரன் என்று அழைக்கப்படும் சிறு சிறு கட்டுகள் உள்ளன. அவையாவும் உலக சபை மாநாட்டில் (World Council of Churches) ஒன்று கூடுகின்றன. அது என்ன? ''முதலாவது அவைகளைச் சேகரியுங்கள்'' அல்லேலூயா! கவனித்தீர்களா? அவர்களை, களை முதலில் பிடுங்கி, கோதுமையிலிருந்து பிரிக்கிறார். ''அவைகளை ஒன்றாக சேர்த்து சுட்டெரியுங்கள்.'' அவர்கள் ஜனங்களிேைடய முரண்பாட்டை விதைத்தனால், தேவனுடைய நியாயத்தீர்ப்பினால் சுட்டெரிக்கப்பட வேண்டும். அவர்கள் தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பெலனை, மறுதலிக்கிறர்கள். அவர்கள் வார்த்தையை மறுதலித்து, யாரோ தேவனுடைய வார்த்தைக்குள் புகுத்தின மத சம்பந்தமான உரிமைகளையும், கோட்பாடுகளையும் கைக் கொள்ளுகின்றனர். அது கிரியை செய்யாது. அது முரண்பாடு. 37முன் காலத்து மகத்தான தீர்க்கதரிசியாகி அமோஸ் கூக்குரலிட்ட விதமாக நானும் கூக்குரலிடுகிறேன். ஆமோஸ் பட்டினத்துக்குள் பிரவேசித்து, ''நான் ஒரு தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல'' சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்? கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்?'' என்றான். அவன் அந்த சந்ததியின் மேல் நியாயத்தீர்ப்ப்பை முன்னறிவித்து, ''நீங்கள் யாரை சேவிப்பதாகக் கூறுகின்றீர்களோ, அவரே உங்களை அழித்துப் போடுவார்'' என்றான். இதை நீங்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள், இது ஒலிநாடாவிலும் பதிவு செய்யப்படுகிறது. இதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் ஆராதிப்பதாகக் கூறும் அதே தேவன்... அறுவடையின் போது உலக சபை மாநாட்டில் ஒன்றுசேரும் இந்த ஜனங்கள்! நீங்கள் அதற்குள் செல்ல வேண்டும். அதற்கு வெளியே நீங்கள் இருக்க முடியாது. நீங்கள் தனிப்பட்ட நபராக அதை விட்டு வெளியே வர வேண்டும். இல்லையேல், அதற்குள் நீங்கள் - செல்ல வேண்டும். இதற்கு நடுவாக வேறெதுமில்லை. அது மிருகத்தின் முத்திரையாயிருக்கும். அந்த முத்திரையை அல்லது முரண்பாட்டை பெறாமல், எந்த மனிதனும் கொள்ளவும், விற்கவும் முடியாது. அதனின்று விலகியிருங்கள்! அதை விட்டி வெளியே வாருங்கள்! அதை விட்டு ஓடிப் போங்கள்! அதை அதைவிட்டு விலகுங்கள்! அவர்கள் ஆராதிப்பதாக உரிமை நம் அந்த தேவனே அவர்களை அழித்துப் போடுவார். அவர்கள், ''நாமெல்லாரும் ஒன்றாயிருக்க வேண்டும் என்று இயேசு ஜெபம் பண்ணினாரே'' என்கின்றனர்.(யோவான்;17:21). 38அவர், ''இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போவார்களோ?'' என்றும் சொல்லியீருக்கிறிரே! (ஆமோஸ்;3:3) அவர், ''ஒன்றாயிருக்க வேண்டும்'' என்று கூறினது. அவரும் பிதாவும் ஒன்றாயிருக்கிறதைப் போல, நாமும் ஒன்றாயிருக்க வேண்டும் என்னும் அர்த்தத்தில் தான். பிதா வார்ததையாயிருந்தார், இயேசு வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாயிருந்தார். அவர் தேவனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையின் வெளிப்படாக இருந்த காரணத்தால், அவர் பிதாவாடு ஒன்றாயிருந்தார். இன்றும் அவ்வாறே உள்ளது எந்த காலத்திலும் அது அவ்வாறே இருந்து வந்துள்ளது. ஆம், ஐயா! இயேசு பிதாவோடு ஒன்றாயிருக்கிறது போல நாமும் ஒன்றாயிருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். கன்னிப் பிறப்பை மறுதலிக்கிறவர்கள், தெய்வீக சுகமளித்தலை மறுதலிக்கிறவர்கள். இதை, அதை மறுதலித்து குழப்பம் உண்க்குபவர்கள் எப்படி ஒன்றாயிருக்க முடியும்? அவர்களில் சிலர் தேவன் இருக்கிறார் என்றோ, அவர் தேவனுடைய குமாரன் என்றோ விசுவாசிப்பதில்லை. அவர் யோசேப்பின் குமாரன் - என்றும் அவர் தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்பட்டார் என்றும் அவர்கள் விசுவாசிக்கின்றனர், நிச்சயமாக. லூத்தரன்களின் இரட்டை சகோதரான சுவிங்கிலிகள் (Zwinglies). அப்படித்தான் விசுவாசிக்க இன்றனர். அவர் ஒரு நல்ல மனிதர் என்று மாத்திரமே அவர்கள் விசுவாசிக்கின்றனர். கிறிஸ்தவ விஞ்ஞானம் (Tne Christian Science) எண்ணும் குழுவும், அவர் தீர்க்கதரிசி அவர் ஒரு சாதாரண மனிதன். அவர் தேவனல்ல என்று விசுவாசிக்கின்றது. அவர் தேவனாயிராவிடில், அவர் இவ்வுலகில் மிகப்பெரிய வஞ்சனாக இருந்திருக்க வேண்டும். அவர் தேவன், அவர் வேறொன்றுமில்லை. அவர் தெய்வீகம் கொண்டவர். அவர் மாமிசத்தில் நம்மிடையே தேவனுடைய குமாரனாக வெளிப்பட்ட தேவனேயன்றி வேறுயாருமல்ல, நிச்சயமாக. அது தான் அவர். 39இப்பொழுது முரண்பாடு பிரவேசித்திருப்பதை நாம் காண்கிறோம். அது இங்குள்ளது என்று நாமறிவோம். யாரும் அதை மறுக்க முடியாது. ஓ, என்னே! கவனித்துக் கொண்டே வாருங்கள். அவரை ஆராதிப்பதாக கூறிக்கொள்ளும், அந்த குழுவை அந்த தேவனே நிர்மூலமாக்குவார். தேவன் தமது விதையை விதைத்தார். நான் மூடிக்கப் போகிறேன். ஏனெனில், ஜெப வரிசையை ஆரம்பிக்க நேரமாகிவிட்டது. தேவன் தமது விதையை விதைத்தார். அவருடைய விதை கிறிஸ்து. இன்னும் சில நாட்களில் கர்த்தருக்கு சித்தமானால், அதைக் குறித்து பேசலாமென்றிருக்கிறேன் - தேவன் தமது நாமத்தை எங்கு வைக்க தீர்மானித்தார் என்பதைக் குறித்து. காலை உணவு கூட்டங்கள் ஒன்றில் நான் ஒருகால் இதைக் குறித்து பேசுவேன். அப்பொழுது நமக்கு அதிக நேரம் இருக்கும். கவனியுங்கள், நாம் தப்பித்துக் கொள்ள ஒரே வழி அவரே. அவரே உண்மையான ஏக சக்கிராதிபதி (1.தீமோ;6:15). அவர் ஒருவரே உண்மையான தேவன், அவரைத் தவிரவேறே தேவன் இல்லை, ''நான் ஒருவரே தேவன்'' என்றார் அவர். இஸ்ரவேலே கேள், நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், ஒரே தேவன் நானே அவர். நீங்கள் வேறு யாரை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்'' என்று இயேசு கூறினார். அவர்கள் அதை நிசாயாவில் செய்தனர். ''நீ கிறிஸ்தவனா?'' ''நான் பாப்டிஸ்டு.'' ''நீ கிறிஸ்தவனா?'' ''நான் பெந்தெகொஸ்தேயினன்.'' ''நீ கிறிஸ்தவனா?'' ''நான் மெதோடிஸ்டு,'' வேறொரு நாமம். 40ஆனால், “இயேசு கிறிஸ்து” என்னும் நாமத்திற்கு அவர் வரும் போது, அவர்களால் கூடுமானவரை அவர்கள் அதை விட்டு அகன்று விடுகின்றனர். அதனுடன் எவ்விதத்திலும் தொடர்பு கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. அவரே வார்த்தை. அந்த வார்த்தை தன்னை பிரகடனப்படுத்துகிறது. கவனியுங்கள், தப்பித்துக் கொள்ள ஒரே வழி! அவர் சாரோனின் ரோஜா என்றும் வேதம் கூறுகின்றது. வேதத்தில் காணப்படும் தேவனுடைய ஒவ்வொரு பட்டப்பெயரும் இயேசுவுக்கே உரியது. அவர் அல்பா, ஓமெகா, ஆதியம் அந்தமுமானவர்; இருந்தவர், இருக்கிறவர், வருகிறவர்; அவர் தாவீதின் வேரும் சந்ததியுமானவர்- இரண்டும்; விடிவெள்ளி நட்சத்திரம்; சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்கின் லீலி புஷ்பம்; அல்பா, ஓமெகா, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, எல்லாமே இயேசு கிறிஸ்துவுக்குள்! யேகோவா தேவன் மாமிச்மாகி நமது மத்தியில் வாசம் செய்து, தம்மை பரிபூரணமாக இயேசுவில் வெளிப்படுத்தினார். இது முற்றிலும் உண்மை. அவர் சரோனின் ரோஜா. அவர்கள் சாரோனின் ரோஜாவுக்கு என்ன செய்தனர்? அதை கசக்கி பிழிந்து, அதிலிருந்து பரிமளத்தைப் பெற்றனர். பரிமவத்தைப் பெற ஒரு அழகான ரோஜா பிழியப்பட வேண்டியதாயுள்ளது. அது அழகான ஒரு வாழ்க்கை. அப்படிப்பட்ட வாழ்க்கை இதுவரை யாரும் வாழ்ந்ததே கிடையாது. ஆயினும் அது, கல்வாரியில் பிழியப்பட வேண்டியதாயிருந்தது. 41அவர்கள் சரேரானின் ரோஜாவிலிருந்து பெற்ற வாசனைதைலத்தை ஆரோனின் சிரசில் ஊற்றினர். அவன் திரைக்குப் பின்னாலிருந்த மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்து கர்த்தருடைய சமுகத்தை அடைவதற்கு முன்பு, அந்த தைலத்தால் அபிஷேகம் பண்ணப்பட வேண்டியதாயிருந்தது. வருடத்திற்கு ஒரு முறை அவன் மாகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்து கிருபாசனத்தின் மேல் இரத்தத்தை தெளிக்கும் போது, அந்த தைலத்தின் அபிஷேகம் அவன் மேல் இருக்க வேண்டும். அது தேவனுக்கு சுகந்த வாசனையாயிருந்தது. அவன் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை தன் மேலும் தெளித்துக் கொண்டு அந்த இரத்தத்தை அங்கு கொண்டு சென்று தெளித்தான். அவனுடைய அங்கியின் கீழ் ஓரங்களில் மாதுளம் பழங்களும், மணிகளும் தொங்கவிடப் பட்டிருந்தது. (யாத்;39:24-26). அவன் அடி எடுத்து வைக்கும் போது, ''தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்'' என்று உச்சரித்துக் கொண்ட சென்றான். 42கவனியுங்கள், அவர் சாரோனின் ரோஜா, சுகந்த வாசனை, ஜனங்களின் மேலுள்ள அபிஷேகம். நீங்கள் ஸ்தாபனக் கோட்பாடுகளுடனோ, வேறெதனுடனே அவருடைய சமுகத்தில் வர முடியாது. வார்த்தையாகிய சாரோனின் ரோஜாவின் அபிஷேகத்துடன் மாத்திரமே நீங்கள் வர முடியும். அவர் பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமும் கூட. உங்களுக்கு அபினி (opium) எப்படி கிடைக்கிறது?நீங்கள் லீலி புஷ்பத்தை எடுத்து அதை பிழியும் போது உங்களுக்கு அபினி கிடைக்கிறது. மருத்துவர்கள் அதை தங்கள் பரிசோதனை கூடங்களில் (laboratories) உபயோகிக்கின்றனர். நரம்புத்தளர்ச்சியால் அவதியுறுகின்ற ஒரு மனிதனை. நாம் எடுத்துக் கொள்வோம் அல்லது வாழ்வில் ஏமாற்றம் மடைந்த ஒரு பெண்ணை எடுத்துக் கொள்வோம். அவளுக்கு பைத்தியம் பிடித்துவிடும் என்னும் உணர்ச்சி ஏற்படுகின்றது. அவள் தரையில் இங்குமங்கும் நடந்து கூச்சவிடுகின்றாள். அவளுக்கு நரம்புதளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒரு மருத்துவர் லீலி புஷ்ப அபினியை சிறிது எடுத்து அவள் கையிலோ அல்லது இரத்தக் குழாயிலோ ஊசியின் மூலம் செலுத்துகிறார். அப்பொழுது அவள் சிறிது நேரம் அமைதலாயிருக்கிறாள். ஆனால், அந்த அபினியின் சக்தி மறைந்தவுடன், அவள் பழைய நிலைக்கு வந்துவிடுகிறாள், முன்னைக் காட்டிலும் மோசமான நிலைக்கு. 43ஆனால் நண்பர்களே, உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். எனக்குத் தெரிந்தவரை, பள்ளத்தாக்கின் லீலி புஷ்பத்திலிருந்து எடுக்கப்பட்ட உண்மையான அபினிக்கு இது எடுத்துக்காட்டாய் உள்ளது. அவரே பள்ளத்தாக்கின் லீலி புஷ்பம், அவர் கல்வாரியில் பிழியப்பட்டார். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம். அவர் புஷ்பமாகப் பிழியப்பட்டார். அத்தனை புஷ்பங்களிலும் இந்த பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே - இந்த மகத்தான சாரோனின் ரோஜா - மிகச்சிறந்த புஷ்பமாகும். அவர் உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிறதற்கும், சுகமளித்தலை மறுபடியும் உலகிற்கு கொண்டு வருவதற்கும், அன்று வானத்துக்கும், பூமிக்கும் நடுவே தொங்கினார். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று வேதம் கூறுகிறது. 44நண்பனே, கர்த்தர் மோசேயிடம், வனாந்தாத்தில் ஒரு வெண்கல சர்ப்பத்தை உயர்த்தும்படி கூறினார். அது இயேசுவுக்கு முன்னடையாளமாய் உள்ளது. வெண்கலம் ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்ட பாவத்துக்கு அறிகுறியாய் அமைந்துள்ளது. ஆகவே, அந்த வெண்கல சர்ப்பம், ''ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்ட பாவத்துக்கு'' எடுத்துக்காட்டாய் உள்ளது. வெண்கலம், தெய்வீக நியாயத்தீர்ப்பை குறிக்கிறது. உதாரணமாக, வெண்கல பலிபீடத்தின் மேல் பலி கிடத்தப்பட்டது, எலியா மேல் நோக்கின போது, வானம் வெண்கலம் போல் இருந்ததாக கண்டான். அது தேவனை விட்டுப் பின்வாங்கி அவிசுவாசித்த தேசத்தின் மேல் வரப்போகும் நியாயந்தீர்ப்பை குறித்தது. வெண்கலம் தெய்வீக நியாயத்தீர்ப்புக்கு எடுத்துக்காட்டாய் உள்ளது. அந்த சர்ப்பம் பாவம் ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்டதை குறிக்கிறது. இயேசுவே நமக்காக பாவமான அந்த சர்ப்பம், தேவனுடைய நியாயத்தீர்ப்பை அவர் தம்மேல் சுமந்து கொண்டார். நமது மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறேம். ஓ, தேவன் இன்றிரவு உங்களுக்காக பெட்டி நிறைய அபினி வைத்திருக்கிறார். கிறிஸ்தவ நண்பனே, நீ ஒருக்கால் வியாதியால் அவதியுறலாம். ஓ, நீ களைத்துப் போயிருக்கலாம், உனக்கு எல்லாம் கடினமாயிருக்கலாம், உன்னால் இனி தாங்க முடியாது என்னும் நிலையை அடைந்திருக்கலாம். நீ வாழும் இந்நவீன உலகில் உனக்குப் பைத்தியமே பிடித்து விடும்போல் இருக்கலாம். 45இன்றிரவு ஃப்லைன் நிகழ்ச்சி கேட்டீர்களா? இவ்வுலகின் முழு ஆதிகக்தையும் தான் விரைவில் கைப்பற்றும் என்று ருஷியா கூறுகின்றது. அது நிகழும் முன்பு, எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழ வேண்டும். நண்பனே, நாம் எவ்வளவு அருகில் இருக்றோம்! அது மிக அருகில் உள்ளது இன்றிரவு உன் முழு இருதயத்தோடும் அவரைத் தேடுவாயா? அவர் பள்ளத்தாக்கின் லீலி புஷ்பம், அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். மோசே சர்ப்பத்தை வனாந்தரத்தில் உயர்த்தினது போன்று, அவர் தமது மக்களிடையே தம்மை உயர்த்த இன்றிரவு இங்கிருக்கிறார்; பாவத்தின் அடையாளம் நியாயந்தீர்க்கப்பட்டது. பாவம் மாத்திரமல்ல, வியாதியும் கூட 'சர்ப்பமானது' மோசேயினால் வனாந்திரத்திலே உயர்த்தப்பட்டது போல, ''மனுஷ குமாரனும் உயர்த்தப்பட வேண்டும்'' என்று இயேசு கூறினார் என்று ஞாபகமிருக்கட்டும். (யோவான்;3:14-15). மோசே ஏன் சர்ப்பத்தை உயர்த்தினான்? பாவம், அவிசுவாசம், வியாதி இவைகளுக்காக. இயேசுவும், பாவம், அவிசுவாசம், வியாதி இவைகளுக்காகவே உயர்த்தப்பட்டார். 46நம்மிடையே பெரிய முரண்பாடு நிலவி வரும் இந்நாட்களில், இயேசு லூக்காவில் இவ்வாறு வாக்களித்துள்ளார். அதாவது ஆண்டவருடைய வருகைக்கு முன்னதாக சோதோமின் நாட்களில் இருந்தது போல இப்பொழுதும் இருக்குமென்றம், மனுஷகுமாரன் அன்று தம்மை ஆபிரகாமுக்கு வெளிப்படுதினது போல், இந்நாட்களிலும் தம்மை. வெளிப்படுத்துவார் என்றும் அவர் வாக்களித்துள்ளார். ஏலோகிம் தேவன் ஜனங்களிடையே மாமிசமாகி, ஆபிரகாமுடன் தங்கியிருந்து, அவனுக்குப் பின்னால் உட்கார்ந்து, கூடாரத்திலிருந்த சாராளைக் காணாமலே, அவள் என்ன, நினைத்தாள் என்பதை அவனிடம் கூறினார்... அவள் பெயரை 'சாராய்' என்பதிலிருந்து 'சாராள்' என்பதாக அவர் மாற்றினார். அவ்வாறே 'ஆபிராம்' என்னும் அவன் பெயரையும் அவர், 'ஆபிரகாம்' என்று மாற்றினார். ''உன் மனைவியாகிய சாராள் எங்கே?'' என்று அவர் கேட்டார் - அவன், ''உமக்குப் பின்னால் கூடாரத்திலிருக்கிறாள்'' என்று பதிலுரைத்தான். அவர், ''ஒரு உற்பவ காலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்தில் திரும்ப வருவேன்'' என்றார். சாராளோ உள்ளத்தில் நகைத்தாள். அவர், ''சாராள் ஏன் நகைக்கிறாள்?'' என்றார். இந்த பெரிய முரண்பாடு ஒன்றாக சேர்க்கப்பட்டு சுட்டெரிக்கப்படும் முன்பு, மனுஷகுமாரன் அன்று தம்மை வெளிப்படுத்தின விதமாகவே மறுபடியும் வெளிப்படுத்துவார் என்று இயேசு கூறினார்... அது என்ன? இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை புதிதாக உங்கள் முன் உயர்த்துவதே அது. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் ஜெபத்திற்காக தலை வணங்குவேம். 47அன்புள்ள தேவனே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம். ஆண்டவரே, உமது வார்த்தை எங்களுக்கு நிறைவான ஆகாரமாக அமைந்துள்ளது. அதை நாங்கள் நேசிக்கிறோம். ஆண்டவரே, அதனால் நாங்கள் பிழைக்கிறோம். எங்களுடைய கொள்ளளவு (capacity) எல்லா நேரங்களிலும் போதியதாக. இல்லை, தேவ குமாரனுடைய இரத்தத்தினாலே கிரயத்துக்கு கொள்ளப்பட்ட சகோதரரும், சகோதரிகளுமாகிய நாங்கள் உமது வார்த்தையைச் சுற்றி உமது மேசையில் அமர்ந்து, உமது ஆசிர்வாதங்களை அனுபவிக்க பிரியப்படுகிறோம். ஆண்டவரே, இன்றிரவு உம்மிடத்தில் வருறோம். இந்த இரவுகளை வியாதியஸ்தர்களுக்கு ஜெபிப்பதற்காக நாங்கள் பிரதிஷ்டை செய்திருக்கிறோம். ''உமது தழும்புகளால் நாங்கள் குணமானோம்'' என்று வேதத்தில் நீர் கூறியிருக்கிறீர். அப்படியானால் தணமாவதற்கு நாங்கள் ஜெபிக்க வேண்டிய அவசியமேயில்லை; எங்கள் பாவங்களை மாத்திரம் நாங்கள் அறிக்கை செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம். ஏனெனில், உமது தழும்புகளால் நாங்கள் ஏற்கனவே குணமாகவிட்டோம் (இறந்த காலம்). ஓ, என்னே இரட்சிப்பின் நாள்! என்னே இம்மானுவேல் அளித்துள்ள வாக்குத்தத்தம்! அது முற்றிலும் உண்மையானது. ''இன்னும் கொஞ்ச காலத்தில் உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். ஏனென்றால் நான் உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களோடிருந்து உங்களுக்குள்ளே இருப்பேன்'' என்று நீர் கூறியுள்ளீர். காலம் முடிவதற்கு முன்பு சோதோமில், அக்கினி விழுந்து அந்த புறஜாதி உலகம் எரிந்து போனதற்கு முன்பாக, அங்கு மனுஷகுமாரன் தம்மை வெளிப்படுத்துவார் என்று நீர் வாக்கருளியிருக்கிறீர். பிதாவே, ஜனங்கள் அதை காணத்தவற வேண்டாம். 48தேவனே, பண்படாத ஒருவனைப் போல் நான் அஜபிக்கிறேன். நான் தவறாக எதையாகிலும் கூறியிருந்தால் என்னை மன்னியும், ஆண்டவரே, அவர்களை நான் நேசிக்கிறேன், அவர்கள் இதை இழந்து போக வேண்டாமென்று ஜெபிக்கிறேன். ஆண்டவரே, இந்த இரவு மகத்தான இரவுகளில் ஒன்றாக அமையட்டும். வியாதிப்பட்டோர், அவதியுறுவோர். குருடர் மற்றும் யாராகிலும் இங்கிருந்தால், ஆண்டவரே, இன்றிரவு அவர்கள் சுகமடைவார்களாக! இங்குள்ள ஒவ்வொரு பாவியும் இரட்சிக்கப்படட்டும் - அவர்களுடைய இருதயத்தில் அவர்கள் அவிசுவாசிகளாக இருந்தால், இப்பொழுதே அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வார்களாக! பிதாவே, இதை அருளும். இவையாவும், உமது கரங்களில் உள்ளன. எங்கள் மத்தியில் நீர் வருவதைக் காண எங்களை உம்மிடம் சமர்ப்பிக்கிறோம். யோவான்;14:12ல் நீர், ''என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்'' என்று சொல்லியிருக்கிறீர். நீர் ஜனங்களுக்கு உம்மை வெளிப்படுத்தியிருக்கிறீர் என்று எவ்வளவாக நாங்கள் அறிந்திருக்கிறோம்! தீர்க்கதரிசி ஒருவர் எழும்புவார் என்று மோசே தீர்க்கதரிசனம் உரைத்த தீர்க்கதரிசி நீரே. எத்தனையோ நூற்றாண்டுகளாக அவர்களுக்கு தீர்க்கதரிசி இருக்கவில்லை. எங்கு பார்த்தாலும் முரண்பாடு நிலவினது. ஆயினும் தேவனுடைய வார்த்தை நிறைவேறியே ஆக வேண்டும். எனவே, வார்த்தை மாமிசம் ஆனது. அவ்வாறே முரண்பாடும் மாமிசம் ஆனது. பிதாவே, இன்றைக்கும் அதையே நாங்கள் காண்கிறோம். இன்று முரண்பாடு ஒரு பெரிய கட்டாக கட்டப்பட்டுள்ளது. இன்று வார்த்தையும் வந்துள்ளதை நாங்கள் காண்கிறோம். எங்களுக்கு என்ன செய்ய நீர் விரும்புகிறீரோ, அதை எங்களுக்கு செய்யும். இயேசுவின் நாமத்தில், ஆமென். 49(ஒரு சகோதரி அந்நிய பாஷையில் பேசுகிறாள். ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி.) மிகவும் பய பக்தியாயிருங்கள். அவர் என்ன கூறினார் என்று நமக்குத் தெரியாது. நமக்கு ஏதாவது கூற அவர் விரும்பலாம். எனவே, சிறிது நேரம் பயபக்தியாயிருங்கள் (ஒலி நாடாவில் காலி இடம். ஒரு சகோதரன் அதற்கு அர்த்தம் உரைக்கிறார் - ஆசி). ஆமென். வேதத்தில் நீங்கள் படித்ததுண்டா ? (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி). சத்துரு படையெடுத்து வந்தபோது, அவர்களெல்லோரும் ஓரிடத்தில் கூடி வந்தனர். சத்துரு மிகவும் பலமுள்ளவனாயிருந்தான். அப்பொழுது தேவனுடைய ஆவி ஒரு மனிதனின் மேல் வந்தது. அவன் தீர்க்கதரிசனம் உரைத்து, சந்துருவைத் தாக்க அவர்கள் எங்கு சென்று பதுங்கியிருக்க வேண்டும் என்று கூறினான். அவர்கள் சத்துருவை நிர்மூலமாக்கினர். அது மறுபடியும் நிகழ்கின்றது. உங்கள் சத்துருவை நிர்மூலமாக்க இதுவே இடம் . தேவனுடைய கரத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். கிறிஸ்து தான் தேவனுடைய கரம். கிறிஸ்துவே வார்த்தை. எனவே இப்பொழுது நாம் ஜெப வரிசையை அழைக்கும் போது, வார்த்தையை இன்றிரவு உங்கள் இருதயங்களில் ஏற்றுக்கொள்ளுங்கள். 50இன்று மறுபடியும் பில்லி ஜெப அட்டைகளை விநியோகம் செய்திருக்கின்றான் என்று நினைக்கிறேன் - 'பி' (B) வரிசை. நாம் 'பி' எண்பத்தைந்திலிருந்து தொடங்குவோம். நேற்றிரவு பதினைந்து பேருக்கு ஜெபம் செய்தோம். வழக்கமாக ஒரு இரவில் பதினைந்து பேர்களையே தெரிந்து கொள்வோம். உங்கள் அட்டைகளை கையில் பிடித்துக் கொள்ளுங்கள். இன்று பதினைந்து பேருக்கு ஜெபம் செய்ய முயல்வோம். 'பி' எண்பத்தைந்திலிருந்து, நூறுவரை. யாரிடம், 'பி' எண்பத்தைந்து உள்ளது? கையுயர்த்தவும். ஓ, பின் பாகத்தில். சரி, எண்பத்தைந்து முன்னால் வரவும். இப்பொழுது என் மகன்.... இங்கு அந்நியர்கள் இருக்கக்கூடும். நாம் கையாளும் முறையை அவர்கள் அறியாமலிருக்கலாம். என் மகன், அல்லது வேறு யாரோ, இங்கு வருவார்கள். என் மகனால் வரமுடியாவிட்டால், சகோ. பார்டர்ஸ் அல்லது வேறு யாராவது இங்கு வந்து, நூறு அட்டைகளை எடுத்துக் கொண்டு, ஜனங்களுக்கு முன்பாக அதை குலுக்குவார்கள். அதன் பின்பு அதை விநியோகம் செய்து, உங்களுக்கு ஒரு அட்டையைக் கொடுக்கும் போது, நீங்கள் மேடையின் மேல் வருவீர்களா, இல்லையா என்று அவரால் சொல்ல முடியாது. அது அவருக்குத் தெரியாது. நான் இரவில் வந்து, பத்து அல்லது பதினைந்து அட்டைகளை எடுத்துக் கொள்கிறேன். ஆனால், அதற்கும் நீங்கள் சுகம் பெறுவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நீங்கள் உங்கள் இடத்திலேயே அமர்ந்திருந்து சுகத்தைப் பெற்றுக் கொள்ளலாம். நேற்று இரவு கவனித்தீர்களா? எத்தனை பேர் நேற்றிரவு வந்திருந்தீர்கள்? கையுயர்த்துங்கள் பார்க்கலாம்! கூட்டத்தில் எல்லாவிடங்களிலும் ஜனங்கள் சுகம் பெற்றனர். 51அது, 'பி' எண்பத்தைந்து. 'பி' எண்பத்தைந்து, எண்பக்தாறு, எண்பத்தேழு, எண்பத்தெட்டு, எண்பத்தொன்பது தொண்ணூறு. இவர்கள் முன்னால் வரவும். இப்பொழுது தொண்ணூறிலிருந்து நூறுவரை. தொண்னூறு, தொண்ணூத்தொன்று, தொண்ணூற்றிரண்டு, தொண்ணூற்று மூன்று, தொண்ணூற்று நான்கு, தொண்ணூற்மைந்து, தொண்ணூற்றாறு, தொண்ணூற்றேழு, தொண்னூற்றெட்டு, தொண்ணூற்றொன்பது. உங்களால் நடக்க முடியாவிட்டால்... சக்கர நாற்காலியில் அமர்ந்துள்ளவர்கள் இரண்டு, மூன்று பேர் இங்குள்ளனர் - நான்கு பேர். உங்களிடம் ஜெப அட்டை இருந்து, உங்கள் எண் ஒருக்கால் அழைக்கப்பட்டு, உங்களால் நகர முடியவில்லையென்றால், உங்கள் கையையுயர்த்துங்கள். நாங்கள் சக்கர நாற்காலியை உருட்டி, உங்களை இங்கு கொண்டு வருவோம். 52உங்களிடம் ஜெப அட்டை இல்லாமலிருந்தால், நீங்கள் அங்கேயே உட்கார்ந்து கொண்டு, ஜெபம் செய்து, ''கர்த்தராகிய இயேசுவே, இன்றிரவு அது நானாக இருக்கட்டும்'' என்று கூறுங்கள். ஜெப அட்டை இல்லாதவர்கள் கையுயர்த்துங்கள்! ஓ, என்னே! சரி, இதை நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். அது தூஷணமாகத் தென்படாது என்று நம்புகிறேன். ஒருமுறை ஒரு ஸ்திரீயிடம் ஜெப அட்டை இல்லை. அவர் ஜன நெருக்கத்தின் வழியாக கடந்து வந்து (கூர்ந்து கவனியுங்கள்!) ''நான் மாத்திரம் இந்த மனிதரின் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டால் சுகமாவேன்'' என்று நினைத்தாள். அந்த வரலாறு எத்தனை பேருக்குத் தெரியும்? சரி, அவள் என்ன செய்தாள்? அவள் அவரைத் தொட்டு விட்டு, போய் அமர்ந்து கொண்டாள். இயேசு திரும்பி பார்த்து, அவள் எங்கேயிருக்கிறாள் என்று அறிந்து கொண்டார். அது சரிய? அவளுடைய கோளாறு என்னவென்று அவர் அறிந்து கொண்டார். அது சரியா? அதை அவளிடம் கூறினார். அவளுடைய சரீரத்தில் உதிரத்தின் ஊறல் நின்றதை அவள் உணர்ந்தாள். அது சரியா? ஏன்? அவள் அவரைத் தொட்டாள் (touched). 53இன்றிரவு இங்குள்ள எத்தனை கிறிஸ்தவர்களுக்கு இயேசு கிறிஸ்து எபிரேயர் நிரூபத்தின் படி, நமது பாவங்களைக் குறித்து பரிதபிக்கக் கூடிய (touchet) பிரதான ஆசாரியராயிருக்கிறார் என்று தெரியும்? அவர் அப்படித்தான் இருக்கிறாரா? சரி, அவர் அதே பிரதான ஆசாரிடரின் உத்தியோகத்தை இன்றும் வகித்திருபாரானால், அவர் எப்படி நடந்து கொள்வார்? அன்று அவர் எப்படி நடந்து கொண்டாரோ, அது போல இன்றும் நடந்து கொள்வார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசித்தால், அன்று அவர் கிரியை செய்தது போலவே, இன்றும் கிரியை செய்வார். சரி, எத்தனை பேர் அதை விசுவாசிக்கிறீர்சள்? உங்கள் கைகளையுயர்த்தி, ''நான் உண்மையாக விசுவாசிக்கிறேன்'' என்று கூறுங்கள். சரி, அவர்கள் ஜெப வரிசையை ஏற்படுத்துவதற்கு முன்பு, அங்கே ஒரு ஜெப வரிசையை உண்டாக்குவோம் அவர் இங்கிருக்கிறார் என்று நானறிவேன். அவருடைய பிரசன்னத்தை நான் உணருகிறேன். அவர் இங்கிருக்கிறார் என்று எனக்குத் தெரியும். வாருங்கள். ஜெப வரிசை ஆயத்தமா? நான் அங்கு அழைக்க போனேன். ஜெபித்துக் கொண்டிருங்கள். இந்த பக்கம் பார்த்து ஜெபியுங்கள். அவரை விசுவாசியுங்கள். 54இங்கு ஒரு சீமாட்டி உட்கார்ந்து கொண்டு என்னையே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறாள். மூக்கு கண்ணாடி அணிந்துள்ள சீமாட்டியின் பக்கத்தில் அவள் உட்கார்ந்திருக்கிறாள். அந்த ஒளி அவள் மேல் தொங்கிக் கொண்டிருப்பதை உங்களால் காணமுடிகிறதா? இங்கு பார். அவள் இருதயக் கோளாறினால் - அவதியுறுகிறாள். தேவன் உன்னை சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறாயா? விசுவாசித்தால், உன் கையையுயர்த்து. அதுதான் உன் கோளாறு, அது உண்மை. அதுவே உன் கோளாறுனால், ஜனங்கள் காணும்படி உன் கையையுயர்த்து. அந்த கோளாறு இப்பொழுது இல்லை. அது உன்னை விட்டுப் போய்விட்டது. உன் விசுவாசம் உன்னை சுகட்படுத்தினது. அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். ஓ, முரண்பாடு உள்ளது. ஆனால், இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். ஜெபித்துக் கொண்டேயிருங்கள். நீங்கள் மேடையின் மேல் வர வேண்டிய அவசியமில்லையென்று நீங்கள் அறிய வேண்டும். 55இந்த சீமாட்டி. எனக்குத் தெரிந்தவரை இவளை என் வாழ்க்கையில் நான் கண்டதேயில்லை. அவள் இங்கு நின்று கொண்டு, ஜெப அட்டையை கையில் வைத்துக் கொண்டு, அவள் மேடையின் மேல் அழைக்கப்படுவாளா? இல்லையா? என்று அறியாமலிருந்தாள். யாரோ ஒருவர் உனக்கு ஜெப அட்டையை கொடுத்தார். உன் எண் கூப்பிடப்பட்டது. அதன் விளைவாக நீ மேடையின் மேல் வந்திருக்கிறாய். அது சரியா? நீ யாரென்றம், நீ எங்கிருந்து வந்துள்ளாய் என்றும், உனக்கு என்ன வேண்டுமென்றும் நான் அறிய வழியேயில்லை. அதைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. நான் ஒரு மனிதன். நீ ஒரு ஸ்திரீ. அது உண்மை. இதைப் போன்ற ஒரு காட்சி யோவான் 4ல் காணப்படுகிறது. நீ, ''சகோ. பிரான்ஹாமே, சற்று முன்பு என்ன செய்தீர்கள்?'' என்று கேட்கலாம். அந்த சக்கரப் பல்லை - (gear) சற்று இழுத்தேன். பாருங்கள், எனக்கு ஒன்றும் தெரியாது. அவரே அதை செய்ய வேண்டும். அங்குள்ள ஸ்திரீ எப்படி குணமானாள்? அந்த ஸ்திரீயை என் வாழ்க்கையில் நான் கண்டதேயில்லை. அவள் எனக்கு முற்றிலும் அறிமுகமில்லாதவள். அது ஒரு ஸ்திரீ என்று நினைக்கிறேன். இந்த கூட்டத்தில் இப்பொழுது சுகம் பெற்ற அந்த நபர் யார்? உன் கையையுயர்த்து... நாம் ஒருவருக்கொருவர் அந்நியர் அல்லவா? அது உண்மையானால் உன் கையை ஆட்டு. பாருங்கள்? அந்த ஸ்திரீயை நான் கண்டதேயில்லை. அவள் அங்கு அமர்ந்து, விசுவாசித்துக் கொண்டிருந்தாள். அவள் ஏதோ ஒன்றை தொட்டாள். இல்லையா? என்னைத் தொடுவதானால் பயன் எதுவுமில்லை. 56வேதாகமம் முற்றிலும் தேவனுடைய வார்த்தை என்பதை உங்களால் காண முடிகிறதல்லவா? அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். நாம். கிறிஸ்துவாகிய பரிசுத்த ஆவிக்கு கூடாரங்களாக இருக்கிறோம். பாருங்கள்? அது தான் உண்மையான வித்து. உண்மையான பரிசுத்த ஆவி உண்மையான வித்துக்குள் நுழையும் போது... அது வார்த்தையின் ஒரு பாகத்தை மாத்திரம் ஏற்றுக் கொள்ளாது. (ஏனெனில் பிசாசு அதை உபயோகிக்கிறான்.) நீங்கள் எல்லா வார்க்தையையும், ஏற்றுக்கொள்ள வேண்டும் எவ்வொரு வார்த்தையையும். ஏனெனில் அவர் அரை தேவனல்ல, அவர் முழுவதும் தேவனாயிருக்கிறார். பாருங்கள்? அது தான் நிகழ்கின்றது. இங்கு ஒரு ஸ்திரீ இருக்கிறாள். அவளை நான் கண்டதில்லை. ஒருமுறை இயேசு இப்படிப்பட்ட ஒரு ஸ்திரீயை சந்தித்தார் - ஒருக்கால் அதே நிலையில் இருக்காது. எனக்குத் தெரியாது. அவர் கிணற்றருகே உட்கார்ந்திருந்தார். அவர் சமாரியாவுக்கு செல்ல வேண்டியதாயிருந்தது. சமாரியா ஒரு மலைப்பாங்கான ஊர் என்று நாம் காண்கிறோம். இல்லை, அவர் எரிகோவுக்கு போக வேண்டியதாயிருந்தது. அவர் சமாரியா வழியாகச் சென்று சீகார் என்னும் ஊரை அடைந்தார். அவர் அங்கு ஒரு கிணற்றருகே உட்கார்ந்தார். போஜனம் வாங்க அவர் தமது சீஷர்களை அனுப்பிவிட்டார். 57இவ்வுலகில் எத்தனை சந்ததியார் உள்ளனர்? மூன்று, சேம், காம், யாப்பேத் சந்ததியினர். நாமெல்லாரும் நோவாவிலிருந்து தோன்றினவர்கள். உலகிலிருந்தமற்றவர் அக்காலத்தில் அழிக்கப்பட்டனர். மூன்று சந்ததியார் மாத்திரமே உள்ளனர் - யூதர், புறஜாதியார், சமாரியர் (இவர்கள் பாதி யூதரும், பாதி புறஜாதியுமாவர்.) இவ்வுலகில் மூன்று சந்ததியார் மாத்திரமே உள்ளனர். எல்லாமே தேவனில் மூன்றில் பரிபூரணப்படும்கிறது, இன்றிரவு நான் முரண்பாட்டின் மூன்று கட்டங்களைச் குறித்து பேசினேன். வார்த்தை மாமிசமான மூன்று கட்டங்களைப் போன்று, பாருங்கள்? அவர் யூதர்களுடன் பேசுகையில், பிலிப்பு நாத்தான் வேலை அவரிடம் கொண்டு வந்த போது அவர், ''அவன் அத்தி மரத்தின் கீழிருக்கும் போது அவனைக் கண்டேன்'' என்றார். அந்திரேயா, பேதுருவை அவரிடம் கொண்டு வந்த போது, அவர், ''உன் பெயர் சீமோன். இனிமேல் நீ பேதுரு என்னப்படுவாய். நீ யோனாவின் குமாரன்'' என்றார். பாருங்கள்? இவர்கள் யாவரும் பூதர்கள். அவர், அங்கு புறஜாதியாரிடம் செய்கிறார்... புற ஜாதியாரிடம் அல்ல, சமாரியரிடம். இப்பொழுது தான், புற ஜாதியாருக்கான காலம். அவர் இதை ஒருமுறையாவது புற ஜாதியாரிடம் செய்யவில்லை. வேதத்தை ஆராய்ந்து பாருங்கள், இல்லவே, இல்லை. ஆனால், அவருடைய வருகைக்கு முன்பு இப்படி செய்வாரென்று அவர், லுக்கா 22ல் வாக்களித்துள்ளார். அவர் கிணற்றினருகே உட்கார்ந்து கொண்டிருந்த போது பாதி யூதரும், பாதி புற ஜாதியுமான ஒரு ஸ்திரீ அங்கு வருகிறாள். அவர், ''ஸ்திரீயே, தாகத்துக்குத் தா'' என்று கேட்டார். அவள், ''நீர் அப்படி கேட்கக் கூடாதே. இங்கு ஒதுக்கப்படுதல், (Segregation) உள்ளதே. நீர் யூதன், நான் சமாரிய குலத்தை சேர்ந்தவள்'' என்றாள். அவரோ, ''நீ யாரிடம் பேசுகிறாய் என்று அறிந்திருந்தாயானால், நீயே என்னிடம் தண்ணீர் கேட்டிருப்பாய்'' என்றார். அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? அவளுடைய ஆவியுடன் தொடர்பு கொள்ள முயன்று கொண்டிருந்தார் அவளுடைய கோளாறு என்னவென்று, அவர் அறிந்த மாத்திரத்தில் அவளுடைய புருஷனை அவர் அழைத்து வரும்படி சொன்னார். ''எனக்குப் புருஷன் இல்லை'' என்று அவள் சொன்னாள். அவர், ''அது சரிதான், உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள்'' என்றார். 58அவர் இப்படி செய்வதை பரிசேயர் கண்ட போது - வார்த்தையின் மத்தியில் முரண்பாடு தோன்றின போது - அவர்கள் என்ன கூறினர்? ''இந்த மனிதன் பெயல்சபூல், குறி சொல்லுகிறவன்.'' பாருங்கள்? இயேசு, ''பரிசுத்த ஆவி வந்து இதை செய்யும் போது, அதற்கு விரோதமாக யாராகிலும் பேசினால், அது அவர்களுக்த மன்னிக்கப்படாது'' என்றார். அது தான் முரண்பாடு. பாருங்கள்? அவருடைய காலத்தில் அவர் மன்னிப்பார் என்று கூறினார். ஏனெனில், அபபொழுது பரிசுத்த ஆவி வரவில்லை. பலியாகிய ஆட்டுக் குட்டியானவர் அப்பொழுது மரிக்கவில்லை. பரிசேயரைப் போல் அந்த சமாரிய ஸ்திரீ எண்ணவில்லை. அவள், ''ஐயா, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன் என்றாள். அநேக நூற்றாண்டுகளாக அவர்களுக்கு தீர்க்கதரிசி இல்லை அவள், நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். கிறிஸ்து எனப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன். அவர் வரும் போது, இதை தான் அவர் செய்வார்'' என்றாள். இதையே அவர் செய்கிருந்தால், அவர் நேற்றும், இன்றும் மாறாதவர் என்பது தெளிவாகிறது. அந்த விதத்தில் அவர் தம்மை அன்று வெளிப்படுத்தினார் என்றால், இன்றைக்கும் அது தான் நடக்கிறதல்லவா? அது அப்படித்தான் இருக்க வேண்டும். இங்கு மறுபடியும் ஒரு ஸ்திரீயும், ஒரு மனிதனும் சந்திக்கின்றனர். ஆனால் இவள் அந்த ஸ்திரீயல்ல, நானும் அந்த மனிதனல்ல. ஆயினும் அதே பரிசுத்த ஆவி இங்குள்ளார். மனுஷகுமாரன் வெளிப்படும் நாட்களில், அவர் செய்த கிரியைகளையே நாமும் செய்வோம் என்று அவர் வாக்களித்தார். 59உன்னை எனக்கு தெரியாது (அது உண்மையென்று நீ அறிவாய்) நாம் முற்றிலும் அந்நியர்கள். நீ அங்கு நின்று கொண்டிருக்கிறாய்... உன்னில் ஏதாகிலும் கோளாறு இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். எனக்குத் தெரியாது. ஆனால் கர்த்தராகிய இயேசு தமது பரிசுத்த ஆவியினால் உன் கோளாறு என்னவென்று எனக்கு வெளிப்படுத்தித் தருவாரானால், அது தேவனுடைய குமாரன் என்றும், மனி தன் அல்லவென்றும் விசுவாசிப்பாயா? இது தேவன் உபயோகிக்கும் ஒரு கூடாரம் மாத்திரமே. அவர் யாரையாகிலும் இப்படி தெரிந்து கொண்டு உபயோகிக்கிறார். அவருடைய ராஜாதிபத்திய கிருபையினாலும் தெரிந்து கொள்ளுதலின் படியும் அவர் இப்படி செய்கிறார். நீ விசுவாசிப்பாயா? (அந்த ஸ்திரீ, 'ஆமென்' என்கிறாள் - ஆசி). கூட்டத்தில் எத்தனை பேர் விசுவாசிப்பீர்கள்? இந்த விளக்குகளுக்கு முன்பாக நாங்கள் இருவரும் நின்று கொண்டிருக்கிறோம். இவ்வாழ்க்கையில் இதற்கு முன்பு நாங்கள் சந்தித்ததே கிடையாது. இந்த ஸ்திரீ யாரென்றும், என்னவாய் இருக்கிறாள் என்றும், எங்கிருந்து வருகிறாள் என்றும், அவளுக்கு என்ன தேவையென்றும் எனக்குத் தெரியாது அங்குள்ள அந்த ஸ்திரீயை வாழ்க்கையில் நான் இதற்கு முன்பு எவ்வாறு கண்டதில்லையோ, அதுபோன்று இந்த ஸ்திரீயையும் நான் கண்டதில்லை. பாருங்கள், இதை தான் நான் செய்ய முயல்கிறேன். அதாவது, வார்த்தை மாமிசமாகி நமது மத்தியில் இருக்கும் போது, முரண்பாட்டை உங்களிட மிருந்து விலக்கி, வார்த்தையை நீங்கள் விசுவாசிக்கும்படி செய்ய முயல்கிறேன். வார்த்தை நமது சொந்த மாமிசத்தில் உயிர்பெறும் போது, அது தேவனுடைய பிரசன்னத்தை காண்பிக்கிறது. 60தேவன் அதை அவளுக்கு அருளுவாராக. அவள் ஒரு தகுதியுள்ள நோக்கத்தைப் பெற விரும்புகிறாள். அவளுக்கு குழந்தையில்லை. அவளுக்கு குழந்தை வேண்டும். அவளுக்கு சுமார் நாற்பது வயது. எனவே, அது முடியாத காரியமல்ல. கூட்டங்களில் அநேக ஸ்திரீகள் மலடிகளாக இருந்து, இவ்வாறு மேடையின் மேல் வந்த போது, கர்த்தர் அவர்களுக்கு குழந்தைகளை அருளியுள்ளார். அதை அறிந்தவர் கை தூக்குங்கள். பாருங்கள்? பாருங்கள்? அன்று, நான் இங்கிருந்து சென்ற பின்பு, ஞாயிறு பகலன்று, ஒரு அருமையான சிறு பெண்ணை தூக்கினேன். அவளுடைய தாய் மலடியாடிருந்தாள். கர்த்தர் பேசினார். அந்த இனிமையான சிறு பெண் இங்கிருக்கிறாளா? அவள் எங்கே? ஆம், இதோ அவள் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் தாய் இங்குள்ளதை நான் கண்டேன், அந்த சிறுமியும் இங்கிருக்கிறாள். அவளைப் பார்த்தீர்களா? அவள் தேவனிடமிருந்து வந்த உரைக்கப்பட்ட வார்த்தை. உன் முழு இருதயத்தோடும் அவரை விசுவாசிப்பாயா? இப்பொழுது நீ உன்னில் உணரும் ஆசிர்வாதம் தேவன் பதிலளிப்பதனால் உண்டானது. என்று விசுவாசிக்கிறாயா? உன் பெயர் என்னவென்று தேவன் எனக்கு தெரியப்படுத்தினால், நீ விசுவாசிக்கிறாயா? அப்படியானால் திருமதி தாம்சனே, நீ வீட்டிற்கு சென்று குழந்தையைப் பெற்றுக் கொள் - உன் முழு இருதயத்தோடும் நீ விகவாசிப்பாயானால். 61உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? விசுவாசமாயிருங்கள், சந்தேகப்படாதீர்கள். தேவனை விசுவாசியுங்கள். தேவன் தேவனாயிருக்கிறார். ஐயா, நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்? நாமும் ஒருவருக்கொருவர் அந்நியர் என்று நினைக்கிறேன். என் வாழ்க்கையில் ஒரேமுறை உங்களை நான் கண்டிருக்கிறேன். அது நீங்கள் இங்கு வந்து கொண்டிருந்த போது. நீங்கள் சகே. ஷகரியானின் மாமாவாகிய, பாடகர் சகோ. மஷகியான் என்று தவறாக நினைத்துக் கொண்டேன். அதன் பின்பு நீங்கள் ஜெப வரிசைக்கு செல்வதைக் கண்டேன். நாம் ஒருவருக்கொருவர் அந்நியராயுள்ள இந்நிலையில், உங்கள் தேவை என்னவென்று கர்த்தராகிய இயேசு என்னிடம் கூறுவாரானால்; அதை ஏற்கனவே அவர் உங்களுக்கு அளித்து விட்டார். அதை விசுவாசிக்க உங்களிடம் போதிய விசுவாசம் இருக்க வேண்டும். எத்தனை பேர் அதை புரிந்து கொண்டீர்கள்? நீங்கள் கேட்டதைப் பெற்றுக் கொண்டீர்கள் என்று விசுவாசிக்க போதிய விசுவாசம்! பாருங்கள்? 62நீங்கள் ஏதோ ஒரு தேவையை நாடி மேடையின் மேல் வந்திருக்கிறீர்கள். உங்கள் விருப்பம் என்னவென்று அவர் என்னிடம் கூறுவாரானால்; அது என்னவென்று நான் அறியேன் என்று உங்களுக்குத் தெரியும். அப்படியென்றால் வேறெதோ ஒன்று அப்படி செய்ய வேண்டும். அவர் அவ்விதம் செய்வதாக அவர் வார்த்தையில் வாக்களித்துள்ளார். அவர் இருதயத்திலிருந்த சிந்தனைகளை அறிந்து கொண்டார். அது சரியா? சரி, நீங்கள் சுகமாக வேண்டுமெனும் விருப்பம் உங்களுக்குள்ளது. ஒன்று நீங்கள் நரம்புத் தளர்ச்சியிலை கஷ்டப்படுகிறீர்கள். அது உண்மை. மற்றொன்று, உங்களுக்கு முதுகு கோளாறு உள்ளது. சில நாட்களாக அது மிகவும் மோசமாக உள்ளது. அதற்காக அனுவை சிகிச்சையும் கூட செய்யப்பட்டது. அது கர்த்தர் உரைக்கிறதாவது. அது உண்மை. வேறொன்று, நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று உங்களுக்கு ஆழ்ந்த விருப்பம். அது முற்றிலும் உண்மை. இங்கு வாருங்கள் அன்புள்ள தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இவர் பரிசுத்த ஆவியினால் நிறைவாராக! அவருடைய தேவைகளை அருள்வீராக! இயேசுவின் நாமத்தில், ஆமென், சகோதானே, அதை பெற்றுக் கொள்ளுங்கள். விசுவாசமுள்ளவராயிருங்கள், சந்தேகப்படாதீர்கள். 63எப்படியிருக்கிறாய்? எனக்குத் தெரிந்தவரை நாம் ஒருவருக்கொருவர் அந்நியர். அது உண்மையானால், ஜனங்கள் நாம் அந்நியர் என்பதை அறிந்துகொள்ள உன் கையையுயர்த்து. அவளை என் வாழ்வில் கண்டதுமில்லை, அறிந்ததுமில்லை. அவளும் என்னைக் கண்டிருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன் - கூட்டத்தில் வந்திருக்கும் போது தவிர. வேதாகமம் என் முன்னால் இருக்க, நான் இந்த ஸ்திரீயை என் வாழ்வில் அறிந்ததேயில்லை என்பதை பரலோகப் பிதா அறிவார். எனவே, எதற்காக நீ இங்கு வந்திருக்கிறாய் என்றும், நீயாரென்றும், உன்னைக் குறித்து எதுவும் எனக்குத் தெரியாது. என்னால் இவைகளை ஒன்றும் கூற இயலாது. ஆனால் ஒன்று, இது ஒரு வரம்... அதைப் பற்றி சற்று முன்பு நான் விவரித்ததை நீ கேட்டிருப்பாய். இங்கு வந்து அவர் என்ன கூறுகிறார் என்று கேட்டு, நான் என்ன காண்கிறேனோ, அதை மாத்திரமே என்னால் கூற முடியும். அவர் கூறாத ஒன்றை என்னால் கூற முடியாது. நானாகவே எதையாகிலும் கூறினால், அது தவறாகி விடும். பாருங்கள்? அது தவறகி விடும். ஆனால் அவர் ஒன்றைக் கூறுவாரானால், அது முற்றிலும் சரியாயிருக்கும். அது ஒருபோதும் தவறாயிருந்ததில்லை, அது தேவனாக இருக்கும் வரைக்கும், அது ஒருபோதும் தவறாகாது. பாருங்கள்? ஏனெனில், தேவன் தவறாக இருக்க முடியாது. 64உனக்கு என்ன பேசவையென்றும், உன் விருப்பம் என்னவென்றும், எதற்காக நீ இங்கு வந்துள்ளாய் என்றும் நீ என்ன செய்தாய் என்றும், அதைப் போன்ற ஏதாவதொன்றை, அல்லது நீ எங்கிருந்து வந்துள்ளாய் என்பதை தேவன் என்னிடம் கூறுவாரானால், நீ விசுவாசிப்பாயா? நன்றி. ஒன்று, உன் பாதங்களில் கோளாறு உள்ளது. உன் பாதங்கள உன்னை தொந்தரவு செய்கின்றன (ஸ்திரீ, 'ஆம்' என்கிறாள் - ஆசி.) அது உண்மை. உன் கையையுயர்த்து... மேலும் உனக்கு ஸ்திரீகளின் கோளாறு உள்ளது (ஆம்). உன் இருதயத்தில் ஒரு ஆழ்ந்த வாஞ்சை குடி கொண்டுள்ளது. நீ யாரையோ இழந்து விட்டாய், அது உன் மகன். அவன் வீட்டை விட்டு, ஓடி விட்டான். அவன் திரும்பி வர நான் ஜெபிக்க விரும்புகிறாய், (ஆம்). பரலோகத்திலுள்ள பிதாவே அவளுடைய மகனை அவனிடம் அனுப்பும் பரிசுத்த ஆவி தாமே, அந்த வாலிபன் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, அவனை தடுத்து நிறுத்தட்டும், அவனை அவன் தாயிடம் அனுப்பும். இயேசுவின் நாமத்தில், ஆமென். எல்லாம் அறிந்துள்ள அவர் அவனை உன்னிடம் அனுப்புவார், கவலைப்படாதே. இப்பொழுது விசுவாசி, சந்தேகப்படாதே. உன் முழு இருதயத்தோடும் விசுவாசி, மற்றவைகளை தேவன் அருளுவார். 65இந்த மூன்று நான்கு சிந்தனைகளைப் பகுத்தறிதல் அது என்னை ஏறக்குறைய குருடாக்கி விட்டது. அதை என்னால் விவரிக்க முடியாது. அதை விவரிக்க வழியேயில்லை. நீங்கள் நாற்பத்தைந்து நிமிடங்கள் அல்லது அதற்கதிக நேரம் பிரசங்கம் பண்ணிகளைப் படைவதைக் காட்டிலும், இப்பொழுது அதிக களைப்படைந்துள்ளீர்களா? என்று நீங்கள் கேடகலாம். ஆம் ஐயா. நான் மூன்று மணி நேரம் பிரசங்கம் செய்தாலும், இவ்வளவு களைப்படைய மாட்டேன். ஒரு ஸ்திரீ கர்த்தராகிய இயேசு பின் வஸ்கிரத்தை தொட்டாள். இந்த ஜனங்கள் என்னைத் தொடவில்லை. இங்குள்ள இந்த ஸ்திரீயை சற்று பாருங்கள், அவள்... (சகா. பிரான்ஹாம் அந்த ஸ்திரீயிடம், ''உன் கையை என் மேல் போடு'' என்கிறார் - ஆசி). அவள் என்னை சுற்றிலும் தொட்டாள். அது எந்த பயனையும் விளைவிக்காது. நான் ஒரு மனிதன் மாத்திரமே. ஆனால் அவள் அவரைத் தொட வேண்டும். ஒரு வரத்தின் மூலம்... என்னுடைய தெல்லாம் என்னைவிட்டுப் போய், நான் காண்பதை மாத்திரமே உங்களிடம் எடுத்துரைக்கிறேன். பாருங்கள்? அவ்வளவுதான், அவள் என்னைத் தொடுவதால் யாதொரு பயனுமில்லை. அவள் என் மூலம் இயேசுவைத் தொட வேண்டும். அப்படித்தான் அந்த ஸ்திரீயும் இயேசுவின் மூலம் தேவனைத் தொட்டாள். அவளுக்கு என்ன கோளாறு என்று அவர் அறிந்திருக்கவில்லை. அவள் அவருடைய வஸ்திரத்தை மாத்திரம் தொட்டுவிட்டு, போய் உட்கார்ந்து கொண்டாள். அவர், ''என்னைத் தொட்டது யார்?'' என்று கேட்டார். அப்பொழுது சீஷர்கள், ''எல்லாருமே உம்மைத் தொடுகிறார்களே, ஏன் இப்படி கேட்கிறீர்?'' என்றனர். அவரோ, ''வல்லமை (Virtue) என்னிலிருந்து புறப்பட்டு சென்றதை நான் உணருகிறேன்'' என்றார். 'வல்லமை' (Virtue) என்றால் என்ன தெரியுமா பெலன். ஒரு ஸ்திரீ அவரைத் தொடும் போது அவர் பலவீன மடைந்தார். அவர் தேவனுடைய குமாரன். அப்படியிருக்க, அவருடைய கிருபையினால் இரட்சிக்கப்பட்ட பாவியாகிய நான் இன்னும் எவ்வளவு அதிகமாக பலவீனமடைய வேண்டும்? இந்த பதத்தறிதல்கள் ஏன் இவ்வளவு அதிகமாக இப்பொழுது நிகழ்கின்றது தெரியுமா? இயேசு, ''நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் அதிக கிரியைகளைச் செய்வான்'' என்றார். (யோவான்;14:12). 'பெரிய கிரியைகள்' என்று அங்கு கூறப்பட்டுள்ளது. ஆனால் கிரேக்க மொழியிலிருந்து சரியான 'மொழிபெயர்ப்பு, 'அதிக கிரியைகள்' என்பதே. 66இந்த சீமாட்டியை எனக்குத் தெரியாது. அவளைப் பற்றி ஒன்றுமே எனக்குத் தெரியாது. மற்றவர்களைப் போல இவளும் எனக்கு அறிமுகமில்லாதவள், நாங்கள் ஒருவருக்கொருவர் அந்நியர். நாம் அந்நியர் என்பதை ஜனங்கள் அறிந்து கொள்ள உன்கையையுயர்த்து. தேவனுடைய குமாரன், ஒரு முறை, இத்தகைய பரந்த காட்சி ஒன்றில், கிணற்றருகே ஒரு ஸ்திரீயை சந்தித்தார், அவர் அவளுடன் சிறிது நேரம் பேசி, அவளுடைய கோளாறு என்னவென்று அறிந்து கொண்டு, அதை அவளிடம் எடுத்துக் கூறினார். அதன் மூலம் அவர் மேசியாவென்பதை அவள் கண்டு கொண்டாள்... நீ என்னைத் தொட்டாய். நான் உன்னைத் தொட்டேன். ஆனால் ஒன்றும் நேரவில்லை. ஆனால் (வரத்தின் மூலம்) என் விசுவாசமும், (அதை விசுவாசிப்பதன் மூலம்) உன் விசுவாசமும், தேவனைத்தொட்டு, அவர் என் மூலம் உன்னுடன் பேசுவாரானால், அவர் சீகார் ஊரில் கிணற்றருகே இருந்தது போல, இங்கும் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்வாய். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். அதை நீ விசுவாசிக்கிறாயா? உனக்கு அநேக கோளாறுகள், அநேக வியாதிகள், அநேக சிக்கலான வியாதிகள். ஆனால், முக்கியமாக கீல் வாதத்திற்காக உனக்கு ஜெபிக்க வேண்டுமென்று நீ விரும்புகிறாய், அது உண்மை. அது சரியா? கீல் வாதத்தினால் நீ விறைப்படைகிறாய். உன் கைகளையுயர்த்து அதை நீ காணும் போது... 67நீ மெள்ள நடந்து வந்தாய் என்பதே என் ஞாபகம் ஒரு நிமிடம் பொறு. வேறு ஏதோ உன்னிடம் கூற வேண்டியிருக்கும்... இங்குள்ள ஜனங்கள் எதையோ நினைக்கின்றனர். அது ஒரு விசுவாசம் போல், இதற்கு விரோதமாக வருகிறது. அவர்கள், ''ஓ, அவர் இதை ஊகித்தார்'' என்பது போல், நினைக்கின்றனர். நீ அருமையானவள், என்னுடன் சற்று நேரம் பேசிக்கொண்டிரு. இங்கு சற்று நேரம் நில். ஏனெனில் நீ தேவனிடத்தில் பெற்றுக்கொள்ள விரும்பும்வேறெதோ ஒன்று உன் இருதயத்தில் குடி கொண்டுள்ளது. உன் ஜெபத்திற்கு நான் பதிலளிக்க முடியாது. ஆனால் அவரால் முடியும். நீ விசுவாசித்தால், அது ஏற்கனவே பதிலளிக்கப்பட்டு விட்டது. உனக்கு விசுவாசத்தையூட்ட இதை கூற விரும்புகிறேன். அது நீ சிநேகிக்கும் ஒருவனைக் குறித்தது. அவன் இங்கில்லை. அது உன் சகோதரன்; அவன் இந்நாட்டிலும் கூட இல்லை. அது ஏரிகள் நிறைந்த இடம். அது மிஷிகனைப் போன்ற. ஆம், அவன் மிஷிகனில் தான் தங்கியிருக்கிறான் அவன் அவனைக் கொல்லக் கூடிய பயங்கரமான வியாதியால் அவதியுறுகிறான். அவனைத் தொல்லை படுத்துவது, சுகமாக்க முடியாத சிறுநீரகக் கோளாறு. அது உண்மை தானே? அது கர்த்தர் உரைக்கிறதாவது. நீ தேவனிடம் உயர்த்தின உன் கையிலுள்ள கைகுட்டையை உன் சகோதரனுக்கு அனுப்பி, அவன் சந்தேகப்பட வேண்டாம் என்றும், அவன் விசுவாசிக்க வேண்டும் என்றும் கூறு. நீ விசுவாகித்தால், அவன் இப்பொழுதே சுகமடைவான். 68உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசித்தால், நீ செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று - அதாவது இதை நீ முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள வேண்டும், அது சரியா? ''ஓ, அவர் ஜனங்களைப் பார்க்கிறார். அதுதான் அவர் செய்கிறார்'' என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்விதமான பேச்சு இங்கு அதிகம் உள்ளது. இது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்... இங்குள்ள இத்த சீமாட்டி; சீமாட்டியே இவ்வழியாக வா. நோயாளியே, அல்லது நீ யாராக இருந்தாலும். நான் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. உனக்குள்ள கோளாறு என்னவென்பதை தேவன் எனக்கு வெளிப்படுத்தித் தர முடியும் என்று நீ விசுவாசிக்கின்றாயா? அப்படியானால் உன் கையையுயர்த்து. இங்குள்ள சீமாட்டி நோயாளி. ஆமாம். சரி, அதை நீ முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் உனக்கு ஆஸ்துமாவினால் ஏற்பட்டுள்ள தொல்லை உன்னை மீண்டும் தொந்தரவு செய்யாது. சரி, வீடு சென்று நீ சுகமடைந்து விட்டாய் என்று விசுவாசி. 69பாருங்கள், அது அங்கேயுள்ளது... நான் இந்த பக்கம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னவானாலும் அந்த தரிசனம் எனக்குக் கிடைத்து விடுகிறது. ஆமென. அதை உங்களால் பார்க்க முடியவில்லையா? தேவன் பரிபூரணமாயுள்ளது போல அதுவும் அவ்வளவு பரிபூரணமாயுள்ளது. நீயும் விசுவாசிக்கிறாயா? உன்னையும் ஆஸ்துமாவிட்டு போய் விடும். அது முடியுமல்லவா? அப்படி நீ விசுவாசிக்கிறாயா? அப்படியானால் நீ கர்த்தராகிய இயேசுவிடம் அவரை விசுவாசிப்பதாக கூறு. இந்த கீல் வாதம் உன்னை முடமாக்கி விட்டால், நீ சுற்றிலும் பிரம்பை வைத்து கட்ட வேண்டியதாயிருக்கும். ஆனால் அப்படி நேரப்போவதில்லை. அப்படி நீ விசுவாசிக்கிறாயா? நீ குணமாகி விடுவாய் என்று நீ விசுவாசிக்கிறாய் அல்லவா? உன் வழியே செல். இயேசு கிறிஸ்து உன்னை குணமாக்குகிறார். இருதய நோய் ஜனங்களைக் கொன்றுவிடுகின்றது ஆனால், அது உன்னைக் கொல்ல வேண்டியதில்லை. தேவன் உன்னை சுகமாக்குவார் என்று நீ விசுவாசிக்கிறாயா? உன் முழு இருதயத்தோடும் விசுவாசித்து செல். எனக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட்டதால், நான் சுகமடைந்து விட்டேன், என்று சொல். 70நீ ஆங்கிலம் பேசுவாயா? உனக்கு ஆங்கிலம் புரியுமா?(மொழி பெயர்ப்பாளர் யாராவது வாருங்கள்? என்று சகோ. பிரான்ஹாம் கூறுகின்றார் - ஆசி). ஆம், சரி நான் அவளிடம் கூறுவதை நீங்கள், அவளுக்கு மொழிபெயர்த்து தருவீர்களா? அவள் விசுவாசித்தால், அவளுடைய வயிற்றுக் கோளாறு அவளை விட்டுப் போய்விடும் என்று கூறுங்கள். அவள் விசுவாசிப்பாளா? உன் முதுகு கோளாறும் உன்னை விட்டு நீங்கிவிடும். உன் வழியே சென்று சுசமடைவாயாக. எப்படி இருக்கிறாய்? நீ விசுவாசிக்கிறாயா? முதுகு கோளாறினால் அவதியுற்று அங்கு உட்கார்ந்து கொண்டிருப்பவர், நான் அவ்வாறு கூறின போது என்னைப் பார்த்தவர். ஐயா, நீங்கள் விசுவாசித்தால், நீங்களும் சுகமடையலாம், சரி ஐயா. உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்த சீமாட்டி. உனக்கு கழுத்து வலி உள்ளது. இல்லையா? தேவன் உன்னை சுகமாக்குவார் என்று நீ விசுவாசிக்கிறாயா? அந்த பையனின் முழங்கால் சுகமடைய அவன் மேல் கைகளை வைக்க விரும்புகிறாயா? அதை நீ விசுவாசிக்கிறாயா? உனக்கு ஸ்திரீகளின் கோளாறு இருந்தது, இப்பொழுது இல்லை. உன் விசுவாசம் உனக்கு சுகமளித்து உன்னை முற்றிலும் குணமாக்கினது. 71இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? அப்படியானால் நாம் ஒருவர் மேல் ஒருவர் கைகளை வைத்து, நாம் ஒவ்வொருவரும் இந்த விசுவாச ஜெபத்தை ஏறெடுப்போம். அன்புள்ள தேவனே, உமது திவ்விய பிரசன்னத்தில் மூடப்பட்டிருக்கும் இந்நேரத்தில், நீர் ஜனங்களின் மத்தியில் அசைவாடி, எல்லாவிடங்களிலும் பிணியாளிகளை சுகமாக்கினதை நாங்கள் கண்டோம். நீர் தேவனாயிருக்கிறீர். இந்த கூட்டத்திலுள்ள அனைவரையும் நீர் சுகமாக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். தேவனுடைய சுவாசம் இவர்கள் இருதயங்களில் புதிதாக விழுவதாக, நேரம் கடந்து கொண்டிருக்கிறது என்பதை இவர்கள் அறிந்து கொள்ளட்டும். இன்னும் சிறிது காலம் தான் நாங்கள் இங்கிருப்போம். அதன் பின்பு நாங்கள் நேசிக்கும் அவருடன் கூட இருக்கப் போகிறோம். அவருடைய பிரசன்னம் இப்பொழுது எல்லோருக்கும் சுகமளிப்பதாக. நாங்கள் சாத்தானை குற்றப்படுத்துகிறோம். அவனுடைய செய்கைகள் அனைத்தையும் நாங்கள் குற்றப்படுத்துகிறோம். சாத்தானே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, இந்த ஜனங்களை விட்டு வெளியே வா. அவரை விசுவாசித்து சுகத்தை ஏற்றுக் கொண்ட அனைவரும் எழுந்து நின்று, ''சுகத்தை பெற்றுக்கொள்ள நான் எழுந்து நிற்கிறேன். அதை நான் விசுவாசிக்கிறேன்'' என்று கூறுங்கள். உங்கள் நிலை என்னவாயிருப்பினும், நீங்கள் உண்மையாக விசுவாசித்தால், எழுந்து நில்லுங்கள். உங்கள் கரங்களையுயர்த்தி, ''கர்த்தராகிய இயேசுவே, என்னை சுகப்படுத்தினதற்காக நன்றி'' என்று கூறுங்கள். கர்த்தர் உங்களோடிருப்பாராக.